வெள்ளி, 28 ஜனவரி, 2011

என் பராமரிப்பில் வளரும் குழந்தை ரஷ்ய பிரதமருக்கும் எனக்கும் பிறந்ததல்ல

ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புட்டினுடனான இரகசிய காதல் தொடர்பில் குழந்தையொன்றுக்கு தாயாகியிருப்பதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள முன்னாள் உடற்பயிற்சி வீராங்கனையான அலினா கபயெவா, தனக்கும் விளாடிமிர் புட்டினுக்கும் குழந்தை எதுவும் பிறக்கவில்லையெனவும், தன் பராமரிப்பிலுள்ள குழந்தை தனது குழந்தையே அல்ல எனவும் தெரிவித்தார்.

“என் பராமப்பில் வளரும் அர்ஸேனியோ என்ற இந்தக் குழந்தை உண்மையில் எனது மருமகனாவார்.

நான் எங்கு சென்றாலும் அர்ஸேனியோவை தூக்கிச் செல்வதைப் பார்த்து அனைவரும் அவரை என் குழந்தையென தவறாக நினைத்து விட்டார்கள்'' என அலினா தெரிவித்தார்.

அதிகார பதவியிலுள்ளவர்களுடனான காதல் சம்பந்தமாக அலினா விபரிக்கையில், ““பலமான பெண்களை கண்டு அச்சப்படும் ஆண்கள் இருக்கிறார்கள். அதேசமயம் என்னை விட பலமான அதிகாரத்துவம் பொருந்திய ஆண்களை நான் அறிவேன்'' என்று கூறினார்.

ரஷ்யாவிலிருந்து வெளிவரும் “வோக்' சஞ்சிகையை மேற்கோள்காட்டி அமெரிக்க பத்திரிகையொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

மேற்படி “வோக்' சஞ்சிகையின் ஜனவரி மாத அட்டைப்படத்தை அலினா அலங்கரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

புட்டினுக்கும் அவரது மனைவி லயுட்மிலா ஷக்ரேப்னேவுக்கும் இரு மகள்மார் உள்ளனர்.

2008 ஆம் ஆண்டில் கபயாவுக்கு குழந்தையொன்று பிறந்துள்ளதாகவும் அதற்கு புட்டினே தந்தையெனவும் செய்திகள் வெளியானமை குறிப்பிடத்தக்கது. முன்னாள் ஜனாதிபதியான விளாடிமிர் புட்டின் தற்போதைய ஜனாதிபதியான திமித் மெட்வேடேவின் பதவிக்காலம் 2012 ஆம் ஆண்டில் பூர்த்தி யடைந்ததும், மீளவும் ஜனாதிபதியாக பதவியேற்பார் என நம்பப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல