விவாகரத்து செய்து 57 வருடங்களின் பின் தம்பதி யொன்று மீளவும் திருமண பந்தத்தில் இணைந்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
லெஸ்லி (93 வயது) மற்றும் எல்ஸி ஹார்பர் (வயது 90) ஆகி யோரே இவ்வாறு திருணம் செய்த தம்பதியாவர்.
லெஸ்லியும் எல்ஸியும் 1937 ஆம் ஆண்டு கிழக்கு யோர்க்ஷியரில் ஹல் எனும் இடத்தில் ஒரு நடன நிகழ்ச்சியில் சந்தித்துக் காதல் கொண்டனர். 1941 திருமண பந்தத்தில் இணைந்த லெஸ்லிக்கும் எல்ஸிக்கும் 1945 ஆம் ஆண்டு மகள் ஒருவர் பிறந்தார். காலப்போக்கில் இனிமையாக சென்ற அவர்களது வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியது. இந்நிலையில் 1954 ஆம் ஆண்டில் இந்த ஜோடி விவாகரத்து செய்து கொண்டது.
அதன் பின் 1960 களில் லெஸ்லியும் எல்ஸியும் தமக்கென புதிய வாழ்க்கைத் துணைகளைத் தேடிக் கொண்டனர்.
எல்ஸியின் புதிய கணவரான பீற்றர் டன் 2002 ஆம் ஆண்டில் மரணமடைந்தார். அதற்கு இரு வருடங்கள் கழித்து லெஸ்லியின் புதிய மனைவியான முரியல் மரணமானார்.
இந்நிலையில் தனிமையில் வாடிய லெஸ்லியையும் எல்ஸியையும் சேர்த்து வைப்பதற்கு அவர்களது ஒரே மகளான போலின் முயற்சி செய்தார்.
அவரது தீவிர முயற்சியின் பயனாக பிரிந்திருந்த லெஸ்லியும் எல்ஸியும் அரை நூற்றாண்டுகளின் பின் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர்.
அவர்கள் இருவர் மனதிலும் உறங்கிக் கிடந்த காதல் மீளவும் துளிர்விட்டது.
இறுதியில் அவர்கள் திருமண பந்தத்தில் மீளவும் இணைந்து கொள்ள முடிவெடுத்தனர்.
அவர்களது மீள் திருமணம் கடந்த வார இறுதியில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக