வெள்ளி, 28 ஜனவரி, 2011

மகள்மாரை சிறந்த பாடசாலையில் சேர்ப்பதற்காக போலி வதிவிட முகவரியை கூறிய பெண்

தனது பிள்ளைகளை சிறந்த பாடசாலையொன்றில் சேர்ப்பதற்காக போலியான முகவரியை வழங்கிய தாயொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் இடம் பெற்றுள்ளது.

ஆசிரிய உதவியாளரான கெல்லி வில்லியம்ஸ் போலா என்ற மேற்படி 40 வயது பெண், ஒஹியோ மாநிலத்திலுள்ள கொப்லி பெயார் லோன் பாடசாலையில் தனது பிள்ளைகளை சேர்ப்பதற்காக அப்பாடசாலை அமைந்துள்ள மாவட்டத்திலுள்ள தனது தந்தையின் வீட்டு முகவரியை தனது வதிவிட முகவரியாக போலியாக குறிப்பிட்டுள்ளார்.

மகள்மார் இருவரும் பாடசாலையில் சேர்க்கப்பட்டு இரு வருடங்களுக்கு பின்பே அவர் போலியான வதிவிட முகவயை வழங்கியுள்ளமை புலன் விசாரணை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

தனது மகள்மாரின் நல்ல எதிர்கால வாழ்க்கைக்காகவே போலியான முகவரியை தான் வழங்கியதாக கெல்லி வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அவருக்கு 10 நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல