வெள்ளி, 28 ஜனவரி, 2011

பாலியல் மோகங் கொண்ட மனைவியிடமிருந்து காப்பாற்றக் கோரி கணவர் பொலிஸில் தஞ்சம்

பாலியல் உறவில் திருப்தியடையாமல் தொடர்ந்து அதற்கு வலியுறுத்தும் தனது மனைவியிடமிருந்து தன்னை பாதுகாக்கும்படி கணவரொருவர் பொலிஸாரிடம் தஞ்சமடைந்த சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.

தென்மேற்கு ஜேர்மனியில் வாழும் துருக்கியரான மேற்படி நபர் தனது மனைவியின் மோகப் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக கடந்த 4 வருடங் களாக வரவேற்பறையிலுள்ள சோபா நாற்காலியில் உறங்கி வருவதாக தெவித்துள்ளார்.

திருமணமாகி 18 வருடங்களாகும் இந்த ஜோடிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.

““நான் இப்போது என் மனைவியிடமிருந்து விவாகரத்தை பெற்று பிரிந்து வாழ தீர்மானித்துள்ளேன். இதன் பின்பாவது எனக்கு சிறிது ஓய்வு கிடைக்கும் என நம்புகிறேன்'' என அந்நபர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

““வேலை முடிந்து வீடு திரும்பவே அச்சமாக உள்ளது. படுக்கையறையில் படுத்து உறங்காமல் வரவேற்பறையில் உறங்குகின்ற போதும், அங்கு வந்தும் என் மனைவி என்னை தொந்தரவு செய்கிறார்.
அதனால் இரவில் சிறிதாவது நிம்மதியாக உறங்குவதற்கு பொலிஸார் உதவ வேண்டும்'' என அவர் தனது முறைப்பாட்டில் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல