வெள்ளி, 28 ஜனவரி, 2011

ஜோன் எப்.கென்னடியின் சடலத்தை ஏற்றி சென்ற அம்புலன்ஸ் வண்டி ஏலம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் எப். கென்னடி படுகொலை செய்யப்பட்ட போது அவரது உடலை ஏற்றிச் சென்ற 1963 ஆம் ஆண்டு கால அம்புலன்ஸ் வண்டி ஒன்று, அரிஸோனா மாநிலத்தில் இடம் பெற்ற ஏல விற்பனையில் 120,000 அமெரிக்க டொலருக்கு விற்பனையாகியுள்ளது.

பரட் ஜக்ஸன் ஏலவிற்பனை நிலையத்தில் விற்பனையான மேற்படி அம்புலன்ஸ் வண்டி போலியானது என வதந்திகள் பரவியுள்ள நிலையில், அரிஸோனா மாநிலத்தில் பரடைஸ் வலி எனும் இடத்தைச் சேர்ந்த அடிஸன் பிறவுண் என்பவர் இந்த வாகனத்தை கொள்வனவு செய்துள்ளார்.

இந்தக் கடற்படை அம்புலன்ஸ் வண்டியிலேயே ஜோன் எப். கென்னடியின் உடல் பெதேஸ்டா கடற்படை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டதாக ஏல விற்பனை விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல