வெள்ளி, 28 ஜனவரி, 2011

தொலைக்காட்சியில் இடம்பெற்ற பாலியல் குற்றச்சாட்டு விவாதத்தின் போது இத்தாலிய பிரதமன் அதிரடி குறுக்கீடு

இத்தாலிய பிரதமர் சிவ்வியோ பெர்லுஸ்கொனி விலைமாதுகளுடன் கட்டணம் செலுத்தி பாலியலில் ஈடுபட்டாரா இல்லையா என்பது தொடர்பில் திங்கட் கிழமை இரவு தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்ட விவாத நிகழ்ச்சியின் போது இடை நடுவே தொலைபேசியில் தொடர்பு கொண்ட பெர்லுஸ்கொனி, நிகழ்ச்சியை நடத்தியவரை அவதூறு செய்து பார்வையாளர்களை அதிர வைத்துள்ளார்.

மேற்படி “லா 7' தொலைக்காட்சி நிறுவனத்துக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி தன்னை யாரென அறிகப்படுத்திக் கொண்ட பெர்லுஸ்கொனி, நிகழ்ச்சியை நடத்திய கார்ட் லேர்னரை விசுவாசமற்ற ஒருவர் என சாடியுள்ளார்.

“இது ஏற்றுக் கொள்ள முடியாத நிகழ்ச்சி. இது முற்று முழுதாக கொடூரமான பிழையான ஒளிபரப்பு'' எனத் தெரிவித்த பெர்லுஸ்கொனி, சுமார் 2 நிமிடங்க ளுக்கு கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளார்.

அவரது பேச்சின் இடையில் குறுக்கிட்ட காட் லேர்னர், “நீங்கள் ஏற்கனவே எங்களை போதியளவு அவதூறு செய்துவிட்டீர்கள்'' என கூறினார்.

எனினும் பெர்லுஸ்கொனி தனது பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்தார்.
அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஐவா ஸானிச்சியை நிகழ்ச்சியை விட்டு வெளியேற வலியுறுத்தும் வகையில் பெர்லுஸ் கொனியின் வார்த்தைகள் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் காட் லேர்னர் மீளவும் குறுக்கிட்டு, “தயவுசெய்து உங்கள் குரலின் தொனியை தணியுங்கள்'' எனத் தெரிவித்தார்.

அதனையடுத்து பெர்லுஸ்கொனி தொலைபேசி அழைப்பைத் துண்டித்தார்.

பெர்லுஸ்கொனி, 17 வயதுடைய இரவு விடுதி நடனமாதான கமா எல் மஹ்ரோக்குடன் பாலியல் தொடர்பைக் கொண்டுள்ளதாகவும் அவருக்கு அவரது உதவியாளர்களான நிகோலி மினெட்டி, எமிலோ பெடே மற்றும் லெலா மோரா ஆகியோரே விலைமாதுக்களை ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படும் குற்றச் சாட்டுகள் தொடர்பில் நீதவான்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல