வியாழன், 10 பிப்ரவரி, 2011

பின் அழகை அதிகரிப்பதற்காக சிலிக்கன் ஊசி ஏற்றிய பெண் பரிதாபமாக உயிரிழப்பு

கிளவ்டியா அடெரொடிமி
அழகை மேம்படுத்தும் முகமாக தனது பிஷ்டப் பகுதியை பெரிதாக்குவதற்கு சிலிக்கனை ஊசி மூலம் ஏற்றிக் கொண்ட யுவதியொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

பித்தானியாவைச் சேர்ந்த கிளவ்டியா அடெரொடிமி எனும் யுவதி (20 வயது), லண்டனிலிருந்து அமெரிக்கா புறப்பட்டு வந்து பில்டெல்பியா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹம்டன் இன் ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார்.

ஹோட்டல் அறையில் வைத்து திங்கட்கிழமை சிலிக்கனை ஊசி மூலம் ஏற்றிக் கொண்ட மேற்படி யுவதி, செவ்வாய்க்கிழமை கடும் சுகவீனமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பயனளிக்காத நிலையில் அவர் உயிழந்துள்ளார்.

உடல் அழகை மேம்படுத்துவதற்காக திரவ சிலிக்கனை ஊசி மூலம் ஏற்றிக் கொள்வதற்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்க நியூயோர்க் நகரைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது பிஷ்டப் பகுதியை பெரிதாக்குவதற்கு ஏற்றிக் கொண்ட திரவ சிலிக்கன் அவரது நுரையீரலை சென்றடைந்ததால் மூச்சுத் திணறி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல