வியாழன், 10 பிப்ரவரி, 2011

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த தமிழருக்கு சுவிசில் கடும் தண்டனை

மன நலம் பாதிக்கப்பட்ட சிறுமியொருத்தியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த சுவிஸ் வாழ் தமிழர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடும் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

பதினொரு வயதேயான மன நலம் பாதிக்கப்பட்ட சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிரஸ்தாப நபர் சந்தேகத்துக்கிடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தார். அதனையடுத்தே அவருக்கு முப்பத்தொன்பது மாதங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளியான நபர் சுவிசில் கடந்த இருபது வருடங்களாக வசிப்பதுடன் தற்போதைக்கு நாற்பது வயதை எட்டிப் பிடித்துள்ளார். துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சிறுமியும் அவரது மைத்துனி உறவுக்காரர் ஆவார்.

அச்சிறுமியின் தாயாருடன் கடந்த காலங்களில் குற்றவாளி தொடர்பு வைத்திருந்ததாகவும் விசாரணைகளில் வெளிவந்துள்ளது. அதன் பின்பே சிறுமி மீது துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் கடந்த வருடம் மார்ச் மாதமளவில் நடைபெற்றிருந்ததுடன், ஒரு வருடம் கழிந்த நிலையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல