வியாழன், 10 பிப்ரவரி, 2011

இலங்கைப் பணிப்பெண்களின் உடல் என்ன சவுதிக்கு ஊசி தாங்கும் உபகரணமா?

எமது நாட்டு பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடிச் செல்வது தமது பிள்ளைகளில் எதிர்கால நலன் கருதிய எதிர்பார்ப்புகளுடன் ஆகும்.

எனினும் சிலருடைய இந்த எதிர்பார்ப்பு மற்றும் கனவு நனவாகாமல் போகும் சந்தர்ப்பங்கள் பலவற்றை நாம் கண்டிருக்கிறோம்.

அவ்வாறு பல எதிர்பார்புகளுடன் வெளிநாட்டுக்குச் சென்று ஏமாற்றத்துடன் மட்டுமன்றி உடம்பில் ஏற்றப்பட்ட ஊசிகளுடனும் நாடு திரும்பிய மற்றுமொரு பெண் குறித்த தகவல் எமக்கு பதிவாகியுள்ளது.

குருநாகல் பொல்பெத்திகம பிரதேசத்தை சேர்ந்த 35 ரோஹினி ராஜபக்ஷ் கடந்த டிசம்பர் 21 ஆம் திகதி பணிப்பெண்ணாக சவுதி அரேபியாவிற்கு சென்றார்.

இதன் போது ரோஹினி சுகவீனம் காரணமாகப் பாதிக்கப்பட்டதால் சவுதி அரேபியாவில் அவர் பணிப்புரிந்த வீட்டு உரிமையாளர் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

சுகயீன நிலை அதிகரித்ததால் கடந்த 4 ஆம் திகதி ரோஹினி நாடு திரும்பினார். குருநாகல் போதான வைத்தியசாலையில் அவர் சோதனை செய்யப்பட்ட போது அவரது உடம்பிலிருந்த ஊசித்துண்டுகள் சில கண்டுபிடிக்கப்பட்டன.

ரோஹினியின் உடம்பில் 7 ஊசித்துண்டுகள் காணப்படுவதாக இன்று மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது வைத்தியர்கள் கண்டுபிடித்தனர்.

இதற்கு முன்னர் சவுதி அரேபியாவிலிருந்து உடம்பில் ஊசி ஏற்றப்பட்ட நிலையில் ஆரியவதி என்ற பெண் நாடு திரும்பியமை நீங்கள் அறிந்ததே.

இவ்வாறு வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்லும் இலங்கை பெண்கள் குறித்து இன்னமும் அதிகாரிகள் கவனம் செலுத்தாமல் இருப்பது நியாயமாகுமா?.

இதேவேளை இந்த விடயம் குறித்து இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்திடம் நாங்கள் வினவினோம். வைத்திய அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் குற்ற விசாரணை பிரிவு அதிகாரி கீர்த்தி முத்துகுமாரன தெரிவித்தார்.

மேலும் குறித்த பணிப்பெண்ணுக்கு தேவையான சுகாதார வசதிகள் செய்து கொடுக்கப்படும் என இலங்கை வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல