வியாழன், 10 பிப்ரவரி, 2011

தாயைக் கொன்று சடலத்தை துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்த மகன்

தனது தாயாரை படுகொலை செய்து அவரது உடலை துண்டுதுண்டாக வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த 19 வயது இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் அமெரிக்க கலிபோர்னியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

மேரிவூட் எனும் இடத்தில் வசிக்கும் மொயிஸஸ் மெராஸ் எஸ் பினோஸா என்ற மேற்படி இளைஞர், தனது தாயாரை படுகொலை செய்து அவரது துண்டாக்கப்பட்ட உடலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்த பின் ஹான்டிங்டன் பார்க்கிலுள்ள பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

விசாரணைகளின் பிரகாரம் குளிர்சாதனப் பெட்டியிலிருந்த துண்டாக்கப்பட்ட சடலம் மெராஸ் எஸ்பினோஸாவின் தாயாருடையது என்பது நிரூபணமாகியுள்ளது. மெராஸ் எஸ்பினோஸாவின் வீட்டிற்கு அயலில் வசிப்பவரான ஜோ பெரெஸ் விபரிக்கையில், ““மெராஸ் மிகவும் அமைதி யானவன். ஆனால் தீயவர்களின் சகவாசம் அவனை மோசமானவனாக மாற்றியுள்ளது'' என்று கூறினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல