ஹோலி ரொபின்ஸன்
நகைக்காகவும் பணத்துக்காகவும் தமது தந்ஹோலி ரொபின்ஸன்தையை படுகொலை செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மகள்மாருக்கு ஆயுள் சிறைத் தண்டனையை விதித்து பிரித்தானிய நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.அஷ்லியஹ் ரொபின்ஸன்
தமது தந்தையான அந்தோனி ரொபின்ஸனை (61 வயது) தமது காதலர்களின் துணையுடன் 15 தடவைகள் கத்தியால் குத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அஷ்லியஹ் ரொபின்ஸன் (19 வயது) மற்றும் ஹோலி ரொபின்ஸன் (16 வயது) ஆகியோர் வட வேல்ஸிலுள்ள ஓல்ட் கொல்வின் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
கொல்லப்பட்ட அந்தோனி ரொபின்ஸன்
இதன் போது வழக்கை விசாரித்த நீதிபதி கிபித் வில்லியம்ஸ், அஷ்லியாஹ் குறைந்தது 22 வருட சிறைத்தண்டனையும் ஹோலி குறைந்தது 18 வருட சிறைத்தண்டனையும் அனுபவிக்க உத்தரவிட்டார்.
காதலர் ஹோர்டன் ஹார்டிங்
அதேசமயம் அவர்களின் காதலர்களான ஹோர்டன் ஹார்டிங்கிற்கு 22 வருட சிறைத் தண்டனையும் ரொபேர்ட்ஸுக்கு 20 வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
காதலர் ரொபேர்ட்ஸ்
மேற்படி குற்றச்செயலை மறைத்து நீதிக்கு புறம்பான விதத்தில் நடந்து கொண்ட குற்றச்சாட்டில் அஷ்லியாஹ் மற்றும் ஹோலியின் தாயாரான ஜோஅன்ன பாருக்கு (45 வயது) 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக