உலகம் முழுவதும் உள்ள சிறந்த 25 அரசியல் தலைவர்களில் இந்தியாவின் மகாத்மாகாந்தி, மொகாலாய மன்னர் அக்பர் ஆகியோரை சிறந்த அரசியல் தலைவர்கள் என பாராட்டி அமெரிக்காவின் டைம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் புகழ்பெற்ற பத்திரிகையான டைம், உலக அளவில் சிறந்த 25அரசியல் தலைவர்களின் பெயர்களை பட்டியலிட்டுள்ளது.இதில் இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட மகாத்மா காந்தி, 16-ம் நூற்றாண்டில் மிகச்சிறந்த மொகலாய மன்னர் ஜலாலூதீன் முகமது அக்பர் ஆகிய இருவரும் அந்த பத்திரிகையால் பாராட்டப்பட்டுள்ளனர்.
தென்ஆப்ரிக்காவில் வக்கீல் தொழில் செய்து வந்த மகாத்மா காந்தியடிகள் இந்தியாவில் இந்தியர்கள் அடிமைப்பட்டுகிடப்பதை பார்த்து கொதித்தெழுந்தார். 1930 -ம் ஆண்டு உப்புசத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட போராட்டங்களால் இந்தியாவிற்கு 1947-ம் ஆண்டு சுதந்திரத்தினை பெற்றுதந்தார். இவரது போராட்டம் அமெரிக்க மக்கள் உரிமைக்காக போராடிய மார்டின் லூதர் கிங் , இனவெறி்க்கொள்கையை கடுமையாக எதிர்த்த நெல்சன்மண்டேலா ஆகியோரை நினைவூட்கிறது.
இதனால் உலகம்போற்றும் அரசில் தலைவராக உள்ளார். அதே போன்று 16-ம் நூற்றாண்டில் வடஇந்தியா முழுவதையும் ஆட்சி செய்த அக்பர் ,சிறந்த கவிஞர், தத்துமேதை, கலை, இலக்கியத்தில் இவர்கொண்டுள்ள ஆர்வம் ஆகியவற்றால் புகழப்படுகிறார். இவரது ஆட்சிகாலம் ஐரோப்பியாவில் ஏற்பட்ட மறுமலரர்ச்சியை போன்று அமைந்தது என்றும் அந்த பத்திரிகையில் புகழப்பட்டுள்ளது.
மேலும் திபெத்திய புத்தமதத்தலைவர் தலாய்லாமா, அடால்ப்ஹிட்லர், முசோலினி, மாவோதுங்,அலெக்ஸாண்டர், முன்னாள் அமெரிக்க அதிபர்கள் ரொனால்டு ரீகன், ஆப்ரஹாம் லிங்கன் உள்ளி்ட்டோரும் டைம் பத்திரிகையி்ன் பாராட்டு பட்டிலில் உள்ளனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக