வியாழன், 10 பிப்ரவரி, 2011

பிக்காஸோவின் இரகசிய காதலியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஓவியம்

உலகப் பிரபல ஓவியர் பிக்காஸோவின் “லா லெக்சர்' ஓவியம் லண்டனில் இடம் பெற்ற ஏல விற்பனையில் 25.2 மில்லியன் ஸ்ரேலிங் பவுணுக்கு (40.7 மில்லியன் அமெரிக்க டொலருக்கு) விற்பனையாகியுள்ளது.

தனது இரகசிய காதலி மேரி தெரேஸி வால்ட்டரை பிரதிநி தித்துவப்படுத்தியே பிக்காஸோ மேற்படி ஓவியத்தை வரைந்திருந்தõர்.

17 வயது மேரி தெரேஸி வால்ட்டரை முதன் முதலாக பிக்காஸோ தனது 45 ஆவது வயதில் பாரிஸில் சந்தித்தார்.

வயது வித்தியாசம், பிக்காஸோவுக்கு ஏற்கனவே திருமணமானமை என்பவை காரணமாக அவர்களது காதல் உறவு பல வருட காலமாக இரகசியமாக இருந்து வந்தது.

பிக்காஸோ மேரி தெரேஸி வால்டரை முதன் முதலாக சந்தித்த போது, ““நான் பிக் காஸோ. நானும் நீயும் ஒன்றிணைந்து மாபெரும் விடயங்களை செய்யப் போகிறோம் '' என்று தெரிவித்துள்ளார்.

“லா லெக்சர்' ஓவியம் வரையப்படுவதற்கு முன்னர் பிக்காஸோ தனது பல ஓவியங்களின் பின்னணியில் மேரி தெரேஸி வால்டரை அடையாளப்ப டுத்தியுள்ளார்.

பிக்காஸோவுடனான காதல் உறவால் மேரி தெரேஸி வால்ட்டர், மாயா என்ற பெண் குழந்தைக்கு தயாரானார்.

மாபெரும் ஓவியமேதையின் வாழ்வில் பிறிதொரு பெண் அங்கத்துவம் வகித்த இரகசியத்தை பிக்காஸோவின் மனைவியான ஒல்கா கொகலோவாவே அம்பலப் படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல