வியாழன், 10 பிப்ரவரி, 2011

சேவலால் தாக்கப்பட்டு நபர் பலி

சட்டவிரோத சேவல் சண்டையின் போது சேவலொன்றின் காலில் கட்டப்பட்டிருந்த கூரிய வெட்டும் கருவியால் வெட்டப்பட்டு நபரொருவர் உயிரிழந்த சம்பவம் அமெரிக்க கலிபோர்னியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

ஜோஸ் லூயிஸ் ஒசோவா என்ற இந்த நபர், கால் பகுதியில் ஏற்பட்ட வெட்டுக் காயத்தால் இரு மணித்தியõலங்களாக உயிருக்கு போராடிய பின் மரணமாகியுள்ளார்.

இத்தகைய சம்பவமொன்றை கேள்விப்படுவது தனது மருத்துவ வரலாற்றிலேயே இதுவே முதல் தடவை என சத்திர சிகிச்சை நிபுணரான மார்ட்டின் கிங் தெரிவித்தார். கடந்த வருடம் சட்டவிரோத சேவல் சண்டைக்காக சேவல்களுக்கு பயிற்சியளித்தமை, சேவல் சண்டையை நடத்தியமை போன்ற குற்றச் சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட ஜோஸ் லூயிஸ் ஒசோவாவுக்கு 230 ஸ்ரேலிங் பவுண் தண்டப்பணம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல