செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

சேனல் 4 வெளியிட்ட பிரபாகரன் மகனின் கடைசி நிமிட புகைப் படங்கள் பொய்யானது:

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனை இலங்கை ராணுவத்தினர் கொடூரமாகக் கொன்றது தொடர்பான புகைப்படங்களை பிரிட்டனைச் சேர்ந்த சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த புகைப் படங்கள் பொய்யானது என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் நடந்த இறுதி கட்ட போரின் போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை சிங்கள ராணுவம் சுட்டு கொன்றது. இந்த காட்சிகள் அடங்கிய ஆவணப்படத்தை இங்கிலாந்தில் இருந்து ஒளிபரப்பாகும் சேனல்-4 தொலைக்காட்சி இன்று இரவு 10.55 மணி அளவில் (இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4.25 மணியளவில்) வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

அதில், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் சிங்கள ராணுவத்தினரால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள காட்சியும் ஒளிபரப்பாகும் என அறிவித்துள்ளது. இச்சம்பவம் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இப்புகைப்படங்கள் தொடர்பாக இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ருவான் வனிக சூரியா செய்தியாளர்களிடம்”"இதுபோன்று இலங்கை ராணுவம் மீது உறுதிப்படுத்த இயலாத புகார்களை பலமுறை அவர்கள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கை தொடர்பான விவாதம் வரும்போதெல்லாம் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுவதும், பின்னர் காணாமல்போவதும் வாடிக்கையாக உள்ளது.

இதுவரை நாங்கள் விசாரணை நடத்துவதற்கு வசதியாக சந்தேகத்துக்கிடமற்ற உறுதியான ஆதாரங்களை யாரும் தரவில்லை. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை தெரிவிப்போர், அது உண்மையா, இல்லையா என்பதை அறிய விசாரணை நடத்தப்படுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்தப் புகார்களுக்கு தீர்வு காணப்படாமல் மர்மமாக வைத்திருக்கவே அவர்கள் விரும்புகின்றனர்.

இலங்ûக்கு களங்கம் விளைவிக்க முயற்சிக்கின்றனர். இந்தப் புகைப்படம் பொய்யானது; இதில் பாதி மட்டுமே உண்மை, ஊக அடிப்படையிலானது. இந்தச் சம்பவத்தைப் புலனாய்வு செய்ய வேண்டும் என்று சேனல்-4 நிறுவனம் விரும்பினால், எங்களிடம் தகுந்த ஆதாரங்களைத் தர வேண்டும். அது தொடர்பாக ராணுவம் சார்பில் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

ஆனால் பிரபாகரன் மகன் சுட்டுக் கொல்லப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்பட ஆதாரம் உண்மையானது என சேனல்-4 தொலைக்காட்சி உறுதிபட தெரிவித்துள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல