செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

மனித இரத்தம் குடிக்கும் இளைஞர் மருத்துவமனையில் அனுமதி!

மனித ரத்தம் குடிப்பதை வழக்கமாக கொண்ட, துருக்கி இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆங்கில நாவல்கள் மற்றும் திரைப்படங்களில் மனித ரத்தம் குடிக்கும் “வேம்பைர் டிராகுலா’ பாத்திரம் பிரபலமானது. வேம்பைர் டிராகுலாக்கள் வவ்வால்களை போல், மனிதர்களின் உடலை கடித்து ரத்தத்தை உறிஞ்சுபவை என அந்த கதைகளில் சித்திரிக்கப்பட்டுள்ளது. அதே போல் துருக்கி நாட்டை சேர்ந்த 23 வயது நபர் தன் உடலில், பல இடங்களில் பிளேடால் கீறி, ரத்தத்தை குடிக்க தொடங்கினார்.

சில நாட்களுக்கு பின், ரத்த வங்கிகளில் இருந்து ரத்தம் வாங்கி வரச் சொல்லி தன் தந்தையை வற்புறுத்தத் தொடங்கினார். பிறகு, கண்ணில் படுபவர்களை கத்தியால் குத்தியும், கடித்தும், ரத்தம் குடிக்க முயன்றார். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த அவரது பெற்றோர் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், “டி.ஐ.டி.,’ எனப்படும் நீண்ட கால மன அழுத்தம் உள்ளிட்ட மன நோய்களால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.

அந்த இளைஞனின் நண்பன் செய்த கொலையும் தன் நான்கு வயது குழந்தை இறந்து போன துக்கமும் அவர் மனதில் கடுமையான பாதிப்பு ஏற்படுத்தி இருப்பதாக அவனை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். “கற்பனை மனிதன் ஒருவன், வன்முறை செயல்களை செய்யவும், தற்கொலைக்கும் தூண்டியதாக அந்த இளைஞர் கற்பனை செய்து கொண்டதால், இவ்வாறு நடந்து கொண்டார்’ என அவர்கள் கூறினர். தொடர் சிகிச்சைக்கு பின் தற்போது ரத்தம் குடிக்கும் பழக்கத்தை அவர் நிறுத்தி விட்டாலும் மனநோய் இன்னும் குணமாகவில்லை.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல