செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

சாப்பாடு வாங்கித் தருவதாக கூறி 5 வயது பெண்குழந்தைகள் பலாத்காரம் செய்து கொலை : குற்றவாளிகளுக்கு வலைவீச்சு!

பெண்களுக்கு எதிராக பெருகிவரும் பாலியல் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கோரும் 100 கோடி பேரிடம் கையொப்பம் வாங்கும் இயக்கம் துவங்கப்பட்ட கடந்த 14ம் தேதி, மகாராஷ்டிரா மாநிலம், பந்தரா மாவட்டம் அருகே உள்ள லக்னி கிராமத்தில் நடைபெற்ற பாலியல் வன்முறை வெறியாட்டம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

லக்னி கிராமத்தில் வசிக்கும் ஏழை பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் எடுபிடி வேலை செய்து வருகிறார். கடந்த 14ம் தேதி, தனது 3 மகள்களையும் காணவில்லை என்று அப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த அவர், முறையே 11, 9, 5 வயதான தனது மகள்களை கண்டுபிடித்து தரும்படி போலீசாரை கேட்டுக்கொண்டார்.

மறுநாள் காலை, லக்னி கிராமத்தின் அருகே உள்ள சாலையோர தாபாவில் இருந்து சற்று தூரத்தில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் 3 சிறுமிகள் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. முந்தைய நாள் இரவு புகார் அளித்த பெண்ணை உடன் அழைத்துச் சென்ற போலீசார், பிணமாக கிடப்பது அவரது மகள்கள் தானா? என்பதை உறுதிபடுத்தும்படி அவரிடம் கேட்டதற்கு, கதறிப் புலம்பிய அந்த தாய், ‘ஆம்.. இவர்கள் 3 பேரும் என் மகள்கள் தான்’ என்று அடையாளம் காட்டினார்.

ஏற்கனவே, ஒருவேளை சோற்றுக்கு கூட வழியில்லாத வறுமை நிலையில் இருந்த அந்த பெண்ணின் குடும்ப சூழ்நிலையை சாதகமாக்கிக் கொள்ள நினைத்த போலீசார், பசிக்கும் வறுமைக்கும் தாக்குப் பிடிக்க முடியாமல் அந்த 3 சிறுமிகளும் தற்கொலை செய்துக்கொண்டதாக இந்த வழக்கை திசை திருப்ப முயன்றனர்.

ஆனால், அந்த சிறுமிகளின் பிணம் இருந்த இடத்தில் மது பாட்டில்களும், ஆண்களின் காலணிகளும் சிதறிக்கிடந்ததால், அவர்கள் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் லக்னி கிராமத்தவர்களிடையே ஏற்பட்டது.

இதனையடுத்து, சிறுமிகளின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனையில், சுமார் 11, 9 மற்றும் ஐந்தே வயதான அந்த 3 சிறுமிகளும் கற்பழித்துக் கொல்லப்பட்ட உண்மை உறுதிப்படுத்தப்பட்டது.

தற்போது, நாக்பூர் சரக போலீஸ் ஐ.ஜி. தலைமையில் மகாராஷ்டிரா போலீசார், தீவிர விசாரணையில் ஈடுபட்டு இந்த கொலைக்கு காரணமான குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல