கட்டார் நீதிமன்றத்தால் படுகொலைக் குற்றவாளியாக காணப்பட்டு, மரண தண்டனைத் தீர்ப்பு விதிக்கப்பட்டு இருக்கின்ற வெங்கடாட்சலம் சுதேஷ்கர் என்கிற மலையக தமிழ் இளைஞனின் விடுதலைக்கு இன்னமும் 06 இலட்சம் ரூபாய் இரத்தப் பணம் தேவைப்படுகின்றது.
இந்திய பிரஜை ஒருவரை முறுகலைத் தொடர்ந்து அடித்துக் கொன்றமைக்காக இவர் இம்மாத இறுதிக்குள் முழுமையான இரத்தப் பணமான 100000 கட்டார் ரியாலை கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு கொடுக்க வேண்டும்.
ஆசிய மனித உரிமைகள் ஆணைக் குழு, சுதேஷ்கரின் அம்மா பூங்கோதை ஆகியோர் பகீரதப் பிரயத்தனத்தை தொடர்ந்து 2.8 மில்லியன் ரூபாவை ஒழுங்கு பண்ணி உள்ளனர்.
சுதேஷ்கர் 2011 ஆம் ஆண்டு கட்டார் சென்று இருக்கின்றார். பழக் கடை ஒன்றில் எடுபிடியாக வேலை செய்து கொண்டு வேறு வேலை தேடி இருக்கின்றார். இந்நாட்களில்தான் இந்தியருடன் முறுகல் ஏற்பட்டு உள்ளது.
கொல்லப்பட்டவரின் குடும்பத்தால் கோரப்பட்டு இருக்கின்ற இரத்தப் பணத்தை செலுத்தத் தவறுகின்ற பட்சத்தில் இவர் கூரிய வாளால் வெட்டப்பட்டு சிரச் சேதம் செய்யப்படுவார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக