செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

’குடித்துக் கொண்டும், கூத்தடித்துக் கொண்டும் இருப்பவர் பாரதி ராஜா!’ – இளையராஜா சாடல்!

‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இளையராஜாவைப் பற்றி பாரதிராஜா மேடையில் குறை கூறியும், புத்திமதி சொல்லிப் பேசியும் இருந்தார். அது குறித்து ஒரு வாசகர் , வார இதழ் ஒன்றில் கேட்ட கேள்விக்கு இளையராஜா, அவருடைய மனக்குமுறலை வெளியிட்டிருக்கிறார்.

வாசகர் கேட்ட கேள்வி இதுதான்:

“மதுரையில் உங்கள் நண்பர் டைரக்டர் பாரதிராஜாவின் பட விழாவில் அவர் இப்போதும் இளைஞர் போல் படு சுறுசுறுப்பாகவும் நடிகைகளுடன் ஜாலியாகவும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் உங்களைப் பற்றி பேச வரும்போது மட்டும் உங்களை குறை கூறுவதும், புத்திமதி சொல்வதுமாக இருந்தாரே, அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது ? ”.

மேற்கண்ட கேள்விக்கு பதிலளித்த இளையராஜா

 “பாரதிராஜா மேடையில் என்னைப் பற்றி பேசிய விஷயங்கள் எல்லாமே என்னிடம் தனியாகப் பேசியிருக்க வேண்டியவை. ஆனால் ஏன் அப்படி பொதுமேடையில் பேசினார் என்றால் தனியாக என்னிடம் பேசும்போது அவருக்கு நான் கொடுக்கும் பதிலில், பேச முடியாவமல் வாயடைத்துப் போவாரே – அதுதான் காரணம்.கிடைத்தற்கரிய மானிட ஜென்மத்தில் கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கடைத்தேறுவதை விட்டுவிட்டு தன் புகழைத் தானே பாடுவதிலும் அடுத்தவனை குறை கூறுவதிலுமா இந்த ஜென்மம் கழிய வேண்டும் ?

அவருக்கு என் மீதுள்ள குறையெல்லாம் நன் அவரைப் போல இல்லையே என்பதுதான். அதாவது குடித்துக் கொண்டும், கூத்தடித்துக் கொண்டும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ என்னவோ ? இல்லை,

இப்படி ஏதோ ஒரு விஷயத்தை நான் இழந்து கொண்டிருப்பதாக நினைக்கிறாரோ ?அப்படி நான் மாறுவதென்பது நடக்கிற காரியமா ? அவர் நினைக்கிறபடிதான் நான் இருக்க வேண்டுமா ? இல்லை என்றால் ஏன் இந்தப் புத்திமதி, என்னை மேடையில் அவமதிப்பது ? அவர் பேச்சை வெறும் பைத்தியக்காரன் பேச்சு என்று விட்டு விட வேண்டியதுதான்.

எப்படியோ இந்த ஜென்மம் வீணாகி விட்டது. கடந்தது கடந்ததுதான். பூங்காற்று திரும்புமா ? என்ன இப்படி எழுதிவிட்டேனே என்று உங்களுக்குத் தோன்றலாம். அவ்வளவு பெரிய விழாவில் என்னை வற்புறுத்தி அழைத்துச் சென்று என்னை அவமதித்துப் பேசியது மட்டும் ஏற்புடைய செயல்தானா ?

அப்படிப் பேசினால் அது இணையதளத்திலும், காணொளிகளிலும் பதிவாக ஆகிவிடும் என்பது பாரதிராஜாவுக்குத் தெரிய வேண்டாமா ?”,

என பதிலளித்திருக்கிறார்.

மிக நெருக்கமாக இருந்த நண்பர்கள் இடையிலான இந்த கருத்து மோதல் இத்துடன் நின்றால் சரி ?

தகவல்  www.screen4screen.com/
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல