செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

கண்ணாடி அணிவதிலும் கவனம் தேவை!

பார்வை குறைபாடு, பேஷன், கிளாமர், வெயில், மழை – இப்படி எதுவாக இருந்தாலும், கண்ணாடி அணிவது இன்றைக்கு அத்தியாவசியமாகி விட்டது. இதில் எதுவாக இருந்தாலும், கண்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அணிவது, மிக மிக அவசியம். கண்ணாடி எப்படி அமைய வேண்டும் என்பதை பார்ப்போமா:

கண்களை விட சிறிதான கண்ணாடிகளை அணியக் கூடாது. நம் கண்ணை விட பெரிதாக இருக்கும் பிரேம்கள் கொண்ட கண்ணாடிகளே, நம் கண்களை பாதுகாக்கும். இப்போது, பெரும்பாலான இளம் வயதினர், பேஷன் என்ற பெயரில், சின்ன அளவு கண்ணாடியை போட்டு, மேலும் கீழும் பார்த்துக் கொண்டிருப்பர். இப்படி பார்க்கும் போது, அடிக்கடி விழி திரை மூடி விலகுவதால், கண் பார்வை பாதிக்கும். கண்ணாடிக்கு மேலாகவும், கண்ணாடிக்கு கீழாகவும் பார்க்கக் கூடாது. கண்ணாடி வழியாகத்தான் பார்க்க வேண்டும்.

கண்ணாடி என்பது, நமக்கு அழகு சேர்ப்பதை விட, கண்ணை பாதுகாப்பதாக அமைய வேண்டும். கண்ணாடியின் பாரம் முழுவதும் மூக்கிலும், காதிலும் சேர்ந்திருக்கும். அதனால், மூக்கு, காதுகளுக்கு நன்றாக பொருந்தக்கூடிய கண்ணாடிகளை அணிய வேண்டும்.

அதேபோல், அடிக்கடி சுத்தமான ஸ்பாஞ்ச் துணியால் துடைத்து, வைத்துக் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பிரேம் மற்றும் லென்சுகளை, திரவ சோப்பு மற்றும் ஷாம்பு போட்டு, வேகமாக செல்லும் தண்ணீரில் கழுவி, மெல்லிய துணியால் துடைத்து, பயன்படுத்த வேண்டும். மெட்டல் பிரேம் என்றால், கழுவ வேண்டாம். சுத்தமான துணியால் துடைத்தால் போதும்.
கண்ணாடியைக் கழுவும்போது, மூக்கோடு சேர்ந்து தாங்கும் பகுதியை நன்றாகக் கழுவவும். ஏனெனில், அந்த இடத்தில் தான் வியர்வை அதிகமாகப்படும்.

இப்போதெல்லாம், கான்டாக்ட் லென்ஸ் மாட்டுவதை யாரும் விரும்புவதில்லை. அடிக்கடி கழற்றிமாட்ட கஷ்டம் என்பதால், பெரும் பாலும் தவிர்த்து விடுகின்றனர். ஆனால், கண்ணாடியை அனைவருமே விரும்பக் காரணம், இது கண்களை பாது காக்க மட்டுமல்ல… முகத்துக்கு எக்ஸ்ட்ரா பியூட்டியை கொடுக்கிறது.

கண்ணாடியை பயன்படுத்துபவர்கள், பிறருடைய கண்ணாடியை பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொருத்தருக்கும், ஒவ்வொரு பார்வை அளவு இருக்கும். தலை அளவும் பெரிதும், சிறிதுமாக இருக்கும். கண்ணாடி பொருந்தாமல் இருந்தால், கண் பார்வை பாதிக்கும்.

பதிமூன்று முதல், 18 வயது வரை உள்ளவர்களுக்கு, எட்டு மாதத்திற்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்ய வேண்டும்.
ஆறு வயதிற்கு கீழே, “ரெட்டினா’ நரம்பு மூலம், பார்வை சக்தி குறையும் சூழல் அதிகம். அதனால், கண்ணாடி போட வேண்டிய அவசியம் உள்ள சிறுவர் – சிறுமியர், கண்ணாடியை கழற்றாமல், எப்போதும் அணிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கான பிரேம்கள் எளிதானதாக, உடையாததாக… இருக்க வேண்டும். பிளாஸ்டிக் லென்சுகளை பொருத்துவது நல்லது.

கண்ணாடிகளை எப்போதும் அதற்கான கூடுக்குள் வைக்கவும். பயணம் செய்யும்போது, “சன் கிளாஸ்’ நல்லது. உஷ்ணத்திலிருந்து கண்களை பாதுகாக்கும். இதனால், கண்கள் புத்துணர்ச்சியாக இருக்கும். முக்கியமாக, கறுப்பு கண்ணாடிகளே கண்களுக்கு குளிர்ச்சி. கோடைகாலங்களில் கறுப்பு கண்ணாடிகளே பெஸ்ட். ஏனெனில், சூரிய வெளிச்சத்தில் இருக்கும் அல்ட்ரா கதிர்கள், 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை தாக்காமல் பாதுகாக்கிறது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல