செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

“வாங்க வைகோ.. என் வீட்டில் சாப்பிட்டுவிட்டு செல்லுங்கள்”

படம்: இணையத்திலிருந்து பெறப்பட்டது

நடைபயணம் மேற்கொண்டுள்ள வைகோவை, இன்று வீதியில் வந்துகொண்டிருந்த ஜெயலலிதா, காரில் இருந்து இறங்கி திடீரென சந்தித்துப் பேசியபோது, நடைபெற்ற உரையாடல்கள், ம.தி.மு.க.-வினரை நெகிழ வைத்துள்ளது. “எங்க ஊருக்கு வந்திருக்கீங்க. வந்து என் வீட்டில் சாப்பிட்டுச் செல்லுங்கள்” என்று ஜெயலலிதா அழைத்துள்ளார்.

ம.தி.மு.க .பொதுச்செயலாளர் வைகோ தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று கோவளத்தில் தொடங்கிய பயணம் இரவு திருப்போரூரில் முடிவடைந்தது. இன்று காலையில் திருப்போரூரில் பயணத்தை தொடங்கிய வைகோ, சிறுதாவூர் வழியாக மாமல்லபுரம் சென்று கொண்டிருந்தபோதே, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார்.

காரிலிருந்து இறங்கிய ஜெயலலிதா, வைகோவிடம் பேசிய பேச்சு அங்கிருந்தவர்களை உருக வைத்து விட்டதாம்..

வைகோவிடம், ஜெயலலிதா கிட்டத்தட்ட 7 நிமிடங்கள் பேசியுள்ளார். நீண்ட காலமாக பார்க்காமல் போன சகோதரியும், சகோதரனும் சந்தித்துப் பேசினால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட பாசப் பேச்சாக அது அமைந்தது.

பார்த்தவுடன் வணக்கம் தெரிவித்த வைகோவிடம், பேசிய முதல்வர் ஜெயலலிதா, “அம்மா எப்படி இருக்காங்க? மனைவி, குழந்தைங்க எப்படி இருக்காங்க? என்று கேட்டார். அதற்கு அனைவரும் நன்றாக இருப்பதாக வைகோ சொன்னார்.

அதன் பின்னர், எங்க ஊருக்கு வந்திருக்கீங்க. வந்து என் வீட்டில் சாப்பிட்டுச் செல்லுங்கள் என்று ஜெயலலிதா அழைத்தபோது வைகோ, “இல்லை, எனது தொண்டர்கள் வேறு ஏற்பாடு செய்து விட்டனர்” என்று பதிலளித்தார்.

அதன் பின்னர், ்இந்த வயசில் ஏன் இப்படி நடந்து கஷ்டப்பட வேண்டும்” என்று ஜெயலலிதா கேட்டபோது அனைவரும் நெகிழ்ந்து போய் விட்டனராம்.

ஜெயலலிதாவுடன் பேசிய வைகோ ஒரே ஒரு கோரிக்கையை மட்டுமே வைத்தார். “தமிழகத்தி்ல் முழு மது விலக்கை அமல்படுத்துங்கள்” என்பது மட்டுமே அந்தக் கோரிக்கை. அதற்கு நேரடியாக பதிலளிக்காத முதல்வர், “உங்கள் நடைப்பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.


விறுவிறுப்பு
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல