ஞாயிறு, 29 மார்ச், 2015

"மயில்-வேல்" வழிபாடு நடத்தும் யாசிதிகளை ஆதரித்ததால் ரவிசங்கருக்கு ஐ.எஸ்.தீவிரவாதிகள் கொலை மிரட்டல்!

மலேசியா சென்றுள்ள வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ஈராக்கில் சிறுபான்மையினராக இருக்கும் யாசிதி இனத்தவருக்கு ஆதரவாக ரவிசங்கர் செயல்பட்டதாலேயே ஐ.எஸ். தீவிரவாதிகள் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.

சனி, 28 மார்ச், 2015

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்த ஐஎஸ்ஐஎஸ்

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அண்மையில் மலேசியா சென்றிருந்தார். அப்போது அவருக்கு கூரியர் மூலம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு கொலை மிரட்டல் விடுத்துள்ளது.

ரொரன்ரோ தமிழ் பத்திரிகையாளர்களைத் தயவுடன் கவனிக்க வேண்டிக் கொள்கிறேன்

உங்கள் பத்திரிகைகளில் இருக்கும் கறுப்பு மை கைகளில் இலகுவாகவே ஒட்டிக்கொள்கிறது. இது ஒரு பத்திரிகைக்கு மட்டுமானதாகஇல்லை. எல்லாத் தமிழ்ப் பத்திரிகைகளும் அப்படியே.

தலிபான்கள் பூமியில்

மதத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்ட கொடூரக் கொலைக்கெதிராக ஆப்கானிஸ்தானில் பெண்கள் கிளர்ந்தெழுந்திருக்கின் றனர். ஆப்கானிஸ் தானில் பார்குந்தா என்ற இளம் பெண் புனித நூலை எரித்ததாக கூறி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதவெறியர்கள் திரண்டு, அந்த பெண்ணை கடுமையாக அடித்து துன்புறுத்தியிருக்கின்றனர். பின்னர் காபூல் ஆற்றங்கரையில் தீ வைத்து எரித்து அப்பெண்ணை கொலை செய்திருக்கின்றனர். இந்தக் கொடூரம் நிகழ்ந்த பின்னரும், பார்குந்தாவின் இறுதிச் சடங்கில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என அடிப்படைவாத மதவெறியர்கள் மிரட்டியிருக்கின்றனர்.

புலிகள் போராடும் காலங்களிலேயே விடுதலைப் போராட்டத்தை தவறான பாதையில் கொண்டு சென்றனர்

1980 களின் இறுதி பகுதி அது, பிரேமதாச அரசும் விடுதலை புலிகளும் தேன் நிலவு கொண்டாடிய காலம் அது, JVP என அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணியை இரும்புக்கரம் கொண்டு நசிக்கிய காலம் அது. பேராதனிய பல்கலைக்கழகத்தில் பயிலும் ஒரு தமிழ் மாணவன் அந்த பகுதியில் உள்ள ஒரு சிங்கள நண்பன் வீட்டில் இருக்கும் போது திடீர் என அப்பகுதி பிரேமதாச அரசின் விசேட படைப் பிரிவான 'பச்சை புலி'களால் ( Green Tigers) சுற்றி வளைக்கப்படுகிறது. பல சிங்கள இளைஞர்கள் சந்தேகத்தின் பெயரில் கைது செய்து இராணுவ வண்டிகளில் ஏற்றப்படுகிரார்கள். இந்த தமிழ் இளைஞனிடமும் விசாரணை ஆரம்பமாகின்றது. தான் யாழ்பாணத்தை சேர்ந்த தமிழன் என தன் அடையாள அட்டையை (Identity Card) எடுத்துக் காட்டுகிறார்.

புதன், 25 மார்ச், 2015

FULL XBMC/Kodi SETUP FROM START TO FINISH (COMPLETE CONFIGURATION)


Share |
Image Hosted by ImageShack.us

இந்தியாவின் பணக்கார தெய்வம்!!!

இந்தியாவின் பணக்கார கோயிலாக அறியப்பட்டு வந்த திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலைப் பின்னுக்கு தள்ளி, கடந்த 2011-ஆம் ஆண்டு ஸ்ரீ பத்மநாபசாமி கோயில் 1 லட்சம் கோடிகளுக்கு மேலான சொத்து மதிப்புடன் நாட்டின் பணக்கார கோயிலாக மாறியது.

கேரளத் தலைநகர் திருவனந்தபுரம் நகரின் மையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பத்மநாபசாமி கோயில், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நிர்வாகத்தின் கீழ் இன்றும் இருந்து வருகிறது.

ஞாயிறு, 22 மார்ச், 2015

என்னை இஸ்லாமியர் என அழைக்காதீர்.. நான் நாத்திகரே: சொல்வது தஸ்லிமா நஸ்ரின்

என்னை இஸ்லாமியராக அழைக்காதீர்.. நான் ஒரு நாத்திகரே. இஸ்லாமியத்தை அந்த மதத்தைச் சேர்ந்தவர்களே எதிர்க்கக் கூடாதா? என கேள்வி எழுப்பியுள்ளார் தஸ்லிமா நஸ்ரின்.

வெள்ளி, 20 மார்ச், 2015

காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்களை அறிய இந்த இணையதளத்துக்கு.....

பொதுமக்களின் வசதிக்காக காணாமல் போன மற்றும் அடையாளம் தெரியாத சடலங்களின் விவரங்கள் அடங்கிய புதிய இணையதளங்களை தமிழக போலீசார் தொடங்கியுள்ளனர்.

பிரபாகரன் போரில் இறக்கவில்லை – சனல் 4 இயக்குனர் அதிர்ச்சி தகவல்-!

போரில் பிரபாகரன் இறக்கவில்லை எனவும், அருகிலிருந்து பிரபாகரன் தலையில் சுட்டுக்கொல்லப்பட்டு மரண தண்டணை நிறைவேற்றப்பட்டதாக “சனல் 4 ” இயக்குனர் கலம் மக்ரே அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார். (கடைசிக்கட்ட போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு பிரபாகரன் இறந்ததாக ஏற்கனவே செய்திகள் கசிந்திருந்தன. இதை உறுதிப்படுத்துவதாகவே “சனல் 4 ” இயக்குனர் கலம் மக்ரே வழங்கிய செவ்வி அமைந்துள்ளது.) பிரித்தானியத் தொலைக்காட்சியான சனல் 4 இல் மூன்று பகுதிகளாக வெளியான ‘No Fire Zone’ என்ற ஆவணப்படம் மட்டுமே இலங்கையில் நடைபெற்ற இனவழிப்பின் உறுதியான ஆதரமாகத் திகழ்கிறது. நீண்ட முயற்சிகளுக்கு மத்தியில் தயாரிக்கப்பட்ட அந்த ஆவணப்படத்தின் இயக்குனர் கலம் மக்ரே.

செவ்வாய், 17 மார்ச், 2015

சிகிரியாவில் பெயர் எழுதிய தமிழ்ப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் – நடந்தது என்ன (மவ்பிம)

சீகிரியாவின் கண்ணாடிச் சுவரில் பெயரொன்றை கிறுக்கினாரென்ற குற்றச்சாட்டில் அநுராதபுரம் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருக்கும் மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி உதய ஸ்ரீ என்ற யுவதியின் நலனை விசாரிப்பதற்காக அவரின் தயாரான சின்னத்தம்பி தவமணி (61) அவர்களை கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்று சந்தித்திருந்தோம்.

கடாபியின் மறுபக்கம்…!!

1. லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம்.

2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது.

3. வீடு மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது , லிபியாவில் வாழும் அனைத்து மக்களும் வீடுகள் பெரும் வரை தனக்கோ தனது பெற்றோருக்கோ வீடு கட்டமாட்டேன் என்று கடாபி சபதம் பூண்டிருந்ததால், அவரது பெற்றோர்கள் இறக்கும் போது அவர்கள் வீடுகள் இல்லாமல் கூடாரங்களிலேயே இறந்தனர் .

சுரேஷ் பிரேமசந்திரன் அவர்களே! இரகசிய முகாங்களை அம்பலப்படுத்துங்கள்....?

"இரகசிய முகாம்கள் தொடர்பான சாட்சியங்கள் தன்னிடம் உள்ளதாகவும் சாட்சியங்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டால் அவற்றை வெளிப்படுத்த தான் தயார் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், திங்கட்கிழமை (16) தெரிவித்துள்ளார்."

அதுசரி இதுவொன்றும் இரகசியமான விடயம் அல்ல. மாறாக புலிகளின் பிரசன்ன காலத்தில் வன்னியிலும், யாழ்ப்பாணம் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் யாழ்பாணத்திலும் புலிகளின் இ(ப)ரகசிய வதை முகாங்கள் இருந்தன.

தமிழ் தேசியவாதிகளின் அரசியலில் துரோகத்தனம் தொடர்பாக மீண்டும் மீண்டும் தோன்றும் அதிசய நிகழ்வுகள் பாகம் - 2

பாகம் - 2

தனித்த ஆதாயம்

இங்கு குறிப்பிடுவதற்கு முக்கியமானது என்னவென்றால் தமிழ் TRaitoriztionதேசியவாதிகளின் அரசியல் அவர்களின் எந்த ஒரு நோக்கத்தையும் சுயேச்சையாக அடைவதில் வெற்றி பெறவில்லை என்பதுதான். ஒருபுறம் அது தமிழ் காங்கிரஸ், இலங்கை தமிழரசுக் கட்சி, ரி.யு.எல்எப் அல்லது ரி.என்.ஏ எதுவானாலும் சரி, மறுபுறத்தில் எல்.ரீ.ரீ.ஈ உட்பட்ட தமிழ் போராளிக் குழுக்களானாலும் சரி அவர்கள் அனைவருமே இதுவரை தோல்வியே அடைந்துள்ளார்கள். இதில் தனித்த ஆதாயமாக காணப்படுவது இந்திய - இலங்கை ஒப்பந்தம் கொண்டுவந்த 13வது அரசியலமைப்பு திருத்தம் மட்டுமே. அரசியல் முன்னணி; இந்த தோல்வியை அடைந்த போதிலும், தமிழ் தேசியவாதிகளின் கட்சிகள் மற்றும் அமைப்புகள், தொடர்ந்தும் உச்ச நிலையிலேயே ஆட்சி செய்தன. தமிழ் தேசியவாதிகளின் அரசியலில் உள்ள தமிழ் ஆட்சியாளரின் இந்த ஏகபோக கட்டுப்பாட்டுக்கு அருகில் உள்ள முக்கிய கருவியாக பயன்படுவது துரோகத்தனமான நடவடிக்கைதான். தங்களால் வழங்க முடியாது தோற்றுப் போகும் எதற்கும் இந்த துரோகத்தனம் என்கிற சமாதானத்தை கூறி தப்பிவிடுவார்கள். யதார்த்தமற்ற மற்றும் அடையமுடியாத இலக்குகளுக்கு அரசியல் முட்டாள்தனம்தான் காரணம் என்பது ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை மாறாக எங்கள் மத்தியில் உள்ள துரோகிகள்மீது தவறுகள் சுமத்தப்படுகின்றன. தமிழர்களுக்கு சொல்லப்படுவது தவறுகள் எங்களுடையது அல்ல ஆனால் துரோகிகளுடையது என்று.

திங்கள், 16 மார்ச், 2015

நாறடிச்சா தாங்க மாட்ட...4 மாசம் தூங்க மாட்ட... "உச்சா" போனால் "திருப்பியடிக்கும்" ஜெர்மனி சுவர்கள்!

பஸ் ஸ்டாண்ட் சுவரைப் பார்த்ததும் நம்ம ஊர் ஆண்கள் மட்டும்தான் ஓடிப் போய் உச்சா போவார்கள் என்றில்லை.. இது உலகளாவிய கருமமாக இருக்கிறது. இப்படிப்பட்டவர்களால் ஜெர்மனியிலும் கூட ஒரே தொல்லையாம். ஜெர்மனி நாட்டில் பொது இடத்தில் சிறுநீர் கழித்தால் முகத்தில் பீய்ச்சியடிக்கும் படியான புதிய வகை நவீன சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பலிக்குமா சேரனின் கனவு?


தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் எல்லாத் துறைகளிலும் மாற்றங்கள் நிகழ்வது சகஜம். அந்த மாற்றங்கள் சினிமாவிலும் அவ்வப்போது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படிச் சமீபத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் சேரன். அந்த மாற்றத்தின் பெயர் "சினிமா 2 ஹோம்' (சி2ஹெச்).

காணாமல் போன புலிகளும் ஆடுகளும்; அரசியல் ஆடுகளமும்!

“மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக் குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.” - லூக்கா 15 அதிகாரம்

பாதுகாப்பு படைகளால் கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்களின் உறவினர்கள் யாழ்.மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி ; வடக்கு மாகாண முதமைச்சர் சீ . விக்னேஸ்வரனைச் சந்தித்து தமது கோரிக்கைகளை முன்வைத்த போது , காணாமல் போனவர்களைப் பற்றி ஒரு புதிய சங்கதியையும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

பிராய்லர் கோழி: ஒரு விழிப்புணர்வு பதிவு.... !!

40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி🐓 வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது. பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது.

தமிழ்தேசியவாதிகளின் அரசியலில் துரோகத்தனம் தொடர்பாக மீண்டும் மீண்டும் தோன்றும் அதிசய நிகழ்வுகள்

பாகம் - 1

துரோகத்தனம் தொடர்பாக தமிழ் தேசியவாத அரசியலில் திரும்பத் திரும்பதோன்றும் தொடர் நிகழ்வு தனது அசிங்கமான தலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. நான் இங்கு, காட்டிக் கொடுப்பு அல்லது தேசத்துரோகம் என்கிற சொற்களைப் பயன்படுத்தாமல் துரோகத்தன்மை என்கிற சொல்லைப் பயன்படுத்தியிருப்பது, உண்மையான காட்டிக்கொடுப்பு அல்லது உண்மையான தேசத்துரோகம் புரிபவர்களுக்கும் மற்றும் நம்பிக்கை மோசம் புரிபவர்கள் அல்லது துரோகமிழைப்பவர்கள் என்று பெயரிடப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை பிரித்துக் காண்பிப்பதற்காகவே. யதார்த்தத்தில் துரோகிகள் என்று அவர்களது அரசியல் எதிரிகளால் அழைக்கப்படுபவர்கள் அவர்கள்மீது சாட்டப்படும் குற்றங்களின்படி குற்றவாளிகள் இல்லை, மற்றும் அத்தகைய ஒரு விளக்கத்துக்கு தகுதியானவர்களும் இல்லை. துரோகத்தன்மை என்பது பயங்கரமான கோயபல்சியன் நடவடிக்கையாகும் அதன்படி அரசியல் எதிரிகள் துரோகிகள் என போலியாகச் சித்தரிக்கப் படுகிறார்கள் அல்லது படம்பிடித்துக் காட்டப்படுகிறார்கள்.

ஞாயிறு, 15 மார்ச், 2015

கோழிக்குழம்பு

சிக்கன் -அரை கிலோ ,
சிறிய வெங்காயம் -1 கப்
நறுக்கிய தக்காளி -1 கப்
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
மல்லித் தூள் – 3 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்-அறை ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு

சிம்பிள் ஜாங்கிரி

தேவையான பொருள்கள் :

உளுந்து - ஒரு கப்
சர்க்கரை - 3 கப்
ஏலக்காய் - 3
உணவு நிறமி (ஃபுட் கலர்) - ஒரு சிட்டிகை.
அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு

சிக்கன் கட்லட்

தேவையான பொருட்கள்

எலும்பில்லாத சிக்கன் – 1/2kg

இஞ்சி பூண்டு விழுது -1tsp

பச்சை மிளகாய் -2

கரம் மசாலா -1/4 tsp

உருளைக்கிழங்கு 100g

சரவண பவன் சாம்பார்

தேவையானவை :

துவரம்பருப்பு - 1/4 டம்ளர்
கத்திரிக்காய் - ஒன்று (நறுக்கியது)
முருங்கைக்காய் - ஒன்று (நறுக்கியது)
சாம்பார் வெங்காயம் - 10 (நறுக்கியது)
தக்காளி - ஒன்று (நறுக்கியது)
பச்சைமிளகாய் - 2 (நறுக்கியது)
உப்பு - தேவைக்கு
புளி - சிறிய லெமன் அளவு

ரவை அல்வா

தேவையான பொருட்கள்:

ரவை-200 கிராம்
முந்திரிப் பருப்பு-100 கிராம்
உலர்ந்ததிராட்சை-50 கிராம்
நெய்-200 கிராம்
சீனி-400 கிராம்
ஏலக்காய்த்தூள்- 1 தேக்கரண்டி

என்னை அடித்து துன்புறுத்துகிறார்: கணவர் மீது ரஜினி, கமல் ஹீரோயின் போலீசில் புகார்

மும்பை: பிரபல நடிகை ரதி அக்னிஹோத்ரி தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.

சனி, 14 மார்ச், 2015

குவைத்தில் மட்டக்களப்பை சேர்ந்த தமிழ் பெண் பாலியல் பலாத்காரத்தால் பலி

குவைத் நாட்டில் மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் தமிழ் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்.

வியாழன், 12 மார்ச், 2015

நடந்தது பலாத்காரம் அல்ல... மத்திய அரசுக்கு நாகாலாந்து அரசு அனுப்பிய அறிக்கையில் ‘திடுக்’ திருப்பம்

திம்மாபூர்: நாகாலாந்தில் பாலியல் குற்றவாளியை பொதுமக்கள் அடித்துக் கொலை செய்தது தொடர்பாக மத்திய அரசுக்கு, அம்மாநில அரசு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், குற்றவாளி தான் பலாத்காரம் செய்யவில்லை என்றும், அது இருவரும் விருப்பத்துடனேயே கொண்ட உறவு என்றும் வாக்குமூலம் அளித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

செவ்வாய், 10 மார்ச், 2015

'இந்தியாவின் மகள்' படம் உண்மைக்கு புறம்பானது: நிர்பயாவுடன் பஸ்சில் இருந்த ஆண் நண்பர் பரபரப்பு தகவல்!

இந்தியாவின் மகள் ஆவணப்படம் போலியானது என்று சம்பவத்தன்று நிர்பயாவுடன் பேருந்தில் சென்ற அவரது ஆண் நண்பர் தெரிவித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி நிர்பயா மைனர் உள்பட 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். சம்பவம் நடந்தபோது நிர்பயாவுடன் இருந்த அவரது நண்பர் அவனிந்திரா பாண்டே அந்த 6 பேரால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தார்.

திங்கள், 9 மார்ச், 2015

குடும்பப் பெயரை கெடுத்துவிட்டேன்: பெற்றோரிடம் மன்னிப்பு கேட்ட ஐஎஸ் தீவிரவாதி இம்வாசி

குடும்பப் பெயரை கெடுத்துவிட்டதற்காக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியான ஜிஹாதி ஜான் என்ற முகமது இம்வாசி தனது பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பிணையக் கைதிகளின் தலைகளை துண்டித்து அவ்வப்போது வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.

என் மகனுக்குத் திருந்தி வாழ்வதற்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள்.

என் மகனுக்குத் திருந்தி வாழ்வதற்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள். அவன் செய்த தவறுக்காக அவனை மன்னித்துவிடுங்கள்” - மயூரனின் அம்மா.

பொதுமன்னிப்புக்கான இறுதி இரங்கல் கோரிக்கையும் இந்தோனேசிய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு விட்ட நிலையில் எதிர்வரும் சில வாரங்களுள் ஒரு நாளில் பாலித் தீவில் உள்ள மனித நடமாட்டம் தடைசெய்யப்பட்ட கடற்கரையொன்றில் மயூரன் சுகுமாரன்,
இதயப் பகுதியில் சிவப்பு நிறத்தில் துப்பாக்கியால் சுடுவதற்கான இலக்கு வரையப்பட்ட வெள்ளை நிற மேலாடைகள் அணிவிக்கப்பட்டுத் தனி கம்பங்களுடன் சேர்த்துக் கைகள் விலங்கிடப்பட்ட நிலையில், பன்னிரு துணை இராணுவ பொலிசார் பத்து மீற்றர் தூரத்தில் வைத்துத் தமது துப்பாக்கிகளை இயக்குவதன் மூலம், மரண தண்டனையை நிறைவேற்றுவர்.

ஞாயிறு, 8 மார்ச், 2015

நகைச்சுவை நடிகர் சந்திரபாபு - சில உண்மையான குறிப்புகள்

தமிழ் சினிமாவின் உலகில் முதன்முதலாக மிகவும் நேர்த்தியாக உடை அணியும் பழக்கத்தை (கோட், சூட் அணியும் பழக்கம்) கொண்டுவந்த பெருமை சந்திரபாபுவையே சாரும். அவர் உடை அணியும் அழகே தனி. புதிய நாகரிகத்தை தன்னை பார்த்து பிறர் தெரிந்துகொள்ளும்படி உடை அணிவார். சந்திரபாபுவுக்கு மிகவும் பிடித்த உடை - வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட். சட்டையின் கையை மடித்துவிட்டிருப்பது அழகாக இருக்கும். பேண்ட் பாக்கெட்டுக்கு வெளியே கர்சிப் தெரிவதுபோல் ஸ்டைலாக வைத்திருப்பார். Perfume மீது அதிக காதல் கொண்டிருந்தார் சந்திரபாபு. அவருக்கு மிகவும் பிடித்த Perfume - Channel 5. படபிடிப்புகளில், காட்சியில் நடித்துவிட்டு வந்ததும் - 'ரெவ்லான்' என்ற உயர்தர சென்ட் பூசப்பட்ட வெள்ளை நிற கர்சிப்பை எடுத்து முகத்தை துடைத்துகொள்வது, சந்திரபாபுவின் வழக்கம்.

2021-ம் ஆண்டு அறுவை சிச்கிக்சை:நோயாளி அதிர்ச்சி

புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த இளைஞர் ஒருவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம், 2021-ம் ஆண்டு ஜனவரி 2 தேதி அறுவை சிகிச்சை செய்ய தேதி கொடுக்கபட்டுள்ளதை கண்டு கடும் அதிர்ர்சி அடைந்துள்ளார்.

சனி, 7 மார்ச், 2015

ஒரு புயல் மாதிரி எல்லாம் நடந்து முடிந்துவிட்டது: கலங்க வைத்த பிபிசி வீடியோ!

டெல்லியில் 4 காமுகர்களால் ஓடும் பஸ்ஸில் மிகக் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு, அதை விட மிகக் கொடுமையாக தாக்கப்பட்டு, குடல் எல்லாம் வெளியே எடுத்து வீசப்பட்ட நிர்பயா குறித்த பிபிசியின் வீடியோவை மத்திய அரசு தடை செய்தது ஏன் என்பதே புரியவில்லை. அந்த பிபிசி வீடியோவை யுடியூபில் நானும் நேற்று பார்த்தேன். மனதை நடுங்க வைத்துவிட்டது அந்த டாகுமெண்டரி. மத்திய அரசின் உத்தரவையடுத்து இன்று அந்த வீடியோவை யுடியூப் நீக்கிவிட்டது.

என்னை கொல்லப் போறீங்கப்பா... நகைகளை தங்கச்சிக்கு கொடுங்க: 'கவுரவ' கொலையான தமிழரசி உருக்கம்!

சிவகங்கை: தந்தை தன்னை எரித்துக்கொல்லப் போகிறார் என்று தெரிந்தும் தன்னுடைய நகைகளை தங்கைக்கு கழற்றிக் கொடுத்துள்ளார் சிவகங்கையைச் சேர்ந்த தமிழ்செல்வி. நெஞ்சை உருக்கும் இந்த சம்பவத்திற்குப் பிறகும் மனம் இளகாத தந்தை, தனது மகளை கழுத்தை நெரித்து கொன்று எரித்துள்ளார்.

புதன், 4 மார்ச், 2015

வாலிபரை கடத்திக் கொன்று சமைத்து அவரின் தாய்க்கே உணவாக அளித்த ஐஎஸ் மிருகங்கள்

பாக்தாத்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வாலிபர் ஒருவரை கடத்தி கொலை செய்து அவரின் உடலை வெட்டி சமைத்து அதை அவரின் தாய்க்கே உணவாக கொடுத்துள்ள கொடுமை நடந்துள்ளது.

ஞாயிறு, 1 மார்ச், 2015

செட்டிநாடு சிக்கன் பிரியாணி

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 3/4 கிலோ
பாசுமதி அரிசி - 4 கப்
வெங்காயம் - 3 (நறுக்கியது)
தக்காளி - 3 (நறுக்கியது)
புதினா - 1 கட்டு
கொத்தமல்லி - 1/4 கட்டு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தயிர் - 1/4 கப்
தேங்காய் பால் - 2 கப்
வறுத்த முந்திரி - 20
தண்ணீர் - 4 கப்
பிரியாணி இலை - 2
எண்ணெய் - 5-6 டேபிள் ஸ்பூன்

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல