காம கொடூர எண்ணம் கொண்ட கிரஹாம் பிஷர் என்பவர் 1998ல் இரண்டு பெண்களை கடத்தி கொலை செய்து, அவர்களில் ஒருவரின் உடல் பாகத்தை வெட்டி எடுத்து சாப்பிட்டுள்ளார். பின்னர் ஹாஸ்டிங்கில் உள்ள அவரின் வீட்டில் அவர்களின் உடலை எரித்துள்ளார்.
1991ல் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். போலீஸ் விசாரணையில் கிரஹாம்தான் இதை செய்தார் என தெரியவரவே அவரை கைது செய்தனர். 2008ல் நடைபெற்ற விசாரணையில் குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டார்.
இது தொடர்பாக வெள்ளியன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் அவருக்கு 21 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மனநலம் பாதித்த கிரஹாம் தனிமையில் இருக்கும் பெண்களை இலக்காக கொண்டு அவர்களை கடத்தி கொலை மற்றும் பலாத்காரம் செய்துள்ளார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக