திங்கள், 20 செப்டம்பர், 2010

தேன் கூட நஞ்சாகுமா?

அற்புதமான மருந்துப்பொருட்களில் ஒன்று தேன். தித்திக்கும் தேன் கூட நஞ்சாகுமா? பெரும் நிறுவனங்களின் லாப வேட்டைக்காக தேனும் நஞ்சாகிக்கொண்டிருக்கிறது என்ற அதிர்ச்சிகரமான ஆய்வினை வெளியிட் டுள்ளது தில்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்.

ஆஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளிலிருந்து இந்தியாவில் இறக்குமதி செய் யப்படும் தேனிலும், உள்நாட்டில் தேன் உற் பத்தியில் ஈடுபட்டுள்ள ‘டாபர் ஹனி’ போன்ற பெரிய நிறுவனங்களின் தேனிலும் 2 முதல் 5 வகையிலான கடுமையான எதிர் உயிரி (ஆன்டி பயாடிக்) மருந்துகள் கலந்திருப்பதை இந்த ஆய்வு அம்பலப்படுத்தியுள்ளது. குறிப்பாக மேற்கண்ட இரண்டு நாடுகளிலும் தடை செய் யப்பட்டுள்ள, கெட்டுப்போன தேன் இந்தியச் சந்தைகளில் மிகவும் சர்வசாதாரணமாக அனு மதிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிய வந்துள்ளது.இத்தகைய கெட்டுப்போன தேனை தொடர்ந்து உட்கொண்டால், உயிர்காக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகளை பிற்காலத்தில் எடுத்துக்கொள்ள நேரிடும் போது, அந்த மருந்துகள் செயலிழந்து போகும் அபாயமும் உள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

தேன் மட்டுமின்றி பலவகையான மருந்துப் பொருட்களும் கலப்படம் நிறைந்ததாக, காலா வதியானவையாக, கெட்டுப்போனவையாக நாடெங்கும் விற்பனையில் புளங்கிக்கொண்டி ருப்பதை அரசு அறியும்; சம்பந்தப்பட்ட துறை யின் அதிகாரிகளும் அறிவார்கள். ஆனால் மக்க ளின் உடல் நலனை பலியிட்டு, தங்களது லாபத் தை மேலும் மேலும் அதிகரித்துக்கொள்வதற் காக இந்தியப் பெரும் நிறுவனங்களும், பன் னாட்டு பெரும் நிறுவனங்களும் ஈவிரக்கமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன என்பதற்கு இந்த ஆய்வு மேலும் ஒரு சான்று.

இந்தியாவில் ஓராண்டில் 52 ஆயிரத்து 230 டன் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. இமய மலைச் சாரலில் துவங்கி குமரிமுனை வரையிலும் பல்வேறு முறைகளில் தேன் உற்பத்தி நடக்கி றது. எனினும் இயற்கையான தேன் உற்பத்தியை விட, பெரும் நிறுவனங்களின் அதிக உற்பத்திக் காக தேனீக்களுக்கே எதிர் உயிர் மருந்துகள் அளிக்கப்படுகின்றன. இதனால் தேனீக்கள் சேகரிக்கும் தேனிலும் இந்த மருந்துகள் படிகின் றன. இத்தகைய தேன் மனிதர்களின் ரத்தம், சிறுநீரகம், கல்லீரல், எலும்புகள், பற்கள் ஆகிய வற்றை படிப்படியாக சேதப்படுத்துகிறது என்ற விபரங்களும் வெளியாகியுள்ளன.

இது சாதாரண விஷயம் அல்ல. விதிமுறை களை மீறி, தேனில் நஞ்சு கலக்கும் கொடியவர் கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி தேன் உட்பட மிக முக்கிய மருந்துப் பொருட்கள் உற்பத்தியில் மக் களின் நலனை பாதுகாக்கும் விதத்தில் கடுமை யான விதிமுறைகளையும் பாதுகாப்பு ஏற்பாடு களையும் அரசு உறுதியாக அமல்படுத்த வேண் டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் வற்புறுத்தியுள்ளது.

நவீன தாராளமயக் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தி வருவதன் விளைவாக இந்தியா வுக்குள் நுழையும் நிறுவனங்களும் சரி, இங்கே இருக்கும் பெரும் நிறுவனங்களும் சரி லாபம்; மேலும் லாபம்; மேலும் மேலும் லாபம் என்ற ஒற்றை நோக்கத்திற்காகவே பொருட்களை உற் பத்தி செய்கின்றன; சந்தையில் விற்கின்றன. இந்த லாப வெறிக்கு நாட்டு மக்களின் உடல் நலனை பலியாக்குவதை அனுமதிக்க முடியாது.


Theekkathir
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல