திங்கள், 20 செப்டம்பர், 2010

தனக்குத்தானே அமிலத்தை பூசி முகத்தை கோரமாக்கிய பெண்

அறிமுகமற்ற பெண்ணால் தான் அமில வீச்சு தாக்குதலுக்கு இலக்காகியதாக தெரி வித்து உலகளாவிய ரீதியில் அனுதாபத்தை சம்பாதித்த பெதானி ஸரோர்ரோ என்ற அமெரிக்கப் பெண், தானே தனது முகத்தில் அமிலத்தை பூசியமை விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாஷிங்டனைச் சேர்ந்த பெதானி ஸரோர்ரோ (28 வயது) என்ற இந்தப் பெண், கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி முன்பின் அறிமுகமற்ற ஆபிரிக்க அமெரிக்க பெண் ணொருவர் தன்னை அணுகி வந்து “ஹேய்' அழகிய பெண்ணே, இதை குடிக்கிறாயா?' எனக் கேட்டபடி தன் மீது அமிலத்தை வீசியதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு ஏற்பட்டுள்ள அமில எரிகாயங்களின் தோற்றப்பாட்டை அவதானித்த விசாரணையாளர்கள், அது தொடர்பில் சந்தேகம் கொண்டு பெதானி யிடம் தீவிர விசாரணையை மேற்கொண்ட போது அவர் உண்மையை ஒப்புக் கொண் டுள்ளார்.

தானே தன் மீது அமிலத்தை பூசிக்கொண்டதாக பெதானி கூறியபோது தாம் பெரிதும் அதிர்ச்சியடைந்ததாக கூறிய வான்கூவர் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரியான மார்லா ஷூவின், பெதானியின் மன நலம் எந்தளவு தூரத்துக்கு மோசமாக பாதிக்கப் பட்டுள்ளது என்பதை இந்த சம்பவத்தின் மூலம் உணர முடிந்ததாக கூறினார்.

பெதானிக்கு ஏற்பட்டிருந்த எரிகாயங்கள் அமிலத்தை வீசியதால் ஏற்படவில்லை அமிலத்தை முகத்தில் தேய்த்ததால் ஏற்பட்டது என அவரை பரிசோதித்த மருத்துவ நிபுணர்கள் அறிக்கையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல