இதன் போது பிஜி நாட்டவர் கூரையில் இருந்து பாய்;ந்து தற்கொலை செய்துக்கொண்டார்
இந்தநிலையில் அவரின் சடலத்தை தமது நாட்டுக்கு அனுப்பிவைக்குமாறு பிஜி கோரிக்கை விடுத்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் வில்லாவூட் சிறைச்சாலையில் இந்த நால்வரும் புகலிடம் நிராகரிக்கப்பட்ட நிலையில் தமது நாடுகளுக்கு திருப்பியனுப்பப்படுவதற்காக வைக்கப்பட்டுள்ளனர்
இந்தநிலையில் அவர்களுக்கு நேற்று காலை நாடு கடத்துவதற்கான ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.
இதனையடுத்து, சிறையின் கூரை மீதேறி போராட்டம் நடத்திய குறித்த நால்வரும் தம்மை நாடு கடத்த முற்பட்டால் கூரையி;ல் இருந்து பாய்;ந்து தற்கொலை செய்துக்கொள்ளப்போவதாக எச்சரித்தனர்
இதன் போது பிஜியின் பிரஜை கூரையில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக