திங்கள், 20 செப்டம்பர், 2010

கர்ப்பமடைந்த இளவயதினருக்கான பாடசாலை ஆரம்பம்

மலேசியாவில் கர்ப்பமடைந்த இளவயதினருக்கான (11 வயது தொடக்கம் 19 வயது வரையானவர்கள்) முதலாவது பாடசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில் கைவிடப்படும் குழந்தைகளின் தொகை அதிகரித்துள்ளதை கவனத்தில் கொண்டு, அதனை குறைக்கும் முகமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தென் மலாக்காவில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த பாடசாலையானது திருமணத்துக்கு அப்பாலான காதல் தொடர்பு மூலம் கர்ப்பமடையும் இளம் பெண்களுக்கு உதவுவதை நோக்காகக் கொண்டது என அதிகாரிகள் தெரிவிக் கின்றனர்.

இப்பாடசாலையில் கர்ப்பமடைந்த மாணவிகளுக்கான மருத்துவப்பரிசோதனைகள், மத ரீதியான ஆலோசனைகள் என்பனவும் வழங்கப்படவுள்ளன.

மலேசியாவில் இந்த வருடம் வீட்டு வாசல்களிலும் குப்பைக் கூடைகளிலும் பொது மலசலகூடங்களிலும் 70 க்கும் மேற்பட்ட பச்சிளங் குழந்தைகள் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கர்ப்பமடைந்த மாணவிக ளுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலையானது அவர்களுக்கு கல்வியை வழங்கு வதுடன் அவர்களது அந்தரங்க தன்மையையும் பேணுவதாக வாக்குறுதியளித்துள்ளது.

கைவிடப்படும் குழந்தைகளின் எண்ணிக் கையை குறைக்க 16 வயதுக்கு குறைந்த சிறுமிகளின் திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல