திங்கள், 20 செப்டம்பர், 2010

இரு கைகளும் கால்களும் இல்லாதவர் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடந்து சாதனை

மின்சார தாக்குதலுக்கு இலக்காகி இரு கைகளையும் கால்களையும் இழந்த பிரான்ஸ் நாட்டவர் ஒருவர், ஆங்கிலக் கால்வாயை வெற்றிகரமாக கடந்து சாதனை படைத்துள்ளார்.

பிலிப்போ குரோயிஸன் (Philippe Croizon,42 வயது) என்ற இந்த நபர், செயற்கைக் கால்களைப் பயன்படுத்தி ஆங்கிலக் கால்வாயில் 34 கிலோமீற்றர் தூரத்தை சுமார் 14 மணி நேரத்தில் கடந்துள்ளார்.

16 வருடங்களுக்கு முன் அவர் கூரையிலிருந்த தொலைக்காட்சி சமிக்ஞை வாங்கியை (அன்டனா) அகற்றும் போது மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கானார்.

இந் நிலையில், மின்சாரத் தாக்குதலால் மோசமாகப் பாதிக்கப்பட்ட அவரது கைக ளையும் கால்களையும் அகற்றவேண்டிய நிர்ப்பந்தம் மருத்துவர்களுக்கு ஏற்பட்டது.

பிலிப்பே குரோயிஸனின் இந்த சாதனை குறித்து அவரது தந்தை விபரிக்கையில் தனது மகன் நீச்சலடித்த போது அவருடன் சேர்ந்து 3 டொல்பின்களும் நீந்தியதாகவும் அதனை ஒரு அதிர்ஷ்ட அறிகுறியாக கருதுவதாகவும் கூறினார்.

இந்த சாதனை நிறைவேற்றத்துக்காக பிலிப்பே குரோயிஸன் இரு வருடகாலமாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல