திங்கள், 13 செப்டம்பர், 2010

மாமிச ஆடை அணிந்து வந்த பொப் இசைப் பாடகி 8 விருதுகள் சுவீகரிப்பு (படங்கள் இணைப்பு)

அமெரிக்க லொஸ் ஏஞ்சல் நகரில் ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற எம்..வி. வீடியோ இசை விருது வழங்கும் வைபவத்திற்கு இறைச்சியிலான ஆடை அணிகலன்களை அணிந்து வந்து உலகப் பிரபல பொப் இசைப் பாடகி லேடி ககா பார்வையாளர்களை திகைப்பில் ஆழ்த்தினார்.

இவ்விருது வழங்கும் விழாவில் வழங்கப்பட்ட 15 விருதுகளில் 8 விருதுகளை அவர் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லேடி ககாவின் “பாட் ரொமான்ஸ்' வீடியோ பாடல் தொகுதியானது மிகச் சிறந்த நடன வீடியோ, மிகச் சிறந்த பெண் கலைஞரின் வீடியோ, மிகச் சிறந்த பொப் இசை வீடியோ, மிகச் சிறந்த நடன அசைவு வீடியோ, மிகச் சிறந்த இயக்கம், மிகச் சிறந்த பதிப்பாக்கம், மிகச் சிறந்த வீடியோ என்ப வற்றுக்கான விருதுகளை வென்றிருந்தது.

அத்துடன் லேடி ககா பங்கேற்ற “டெலிபோன்' வீடியோ பாடல் தொகுதியான மிகச் சிறந்த கூட்டு ஆக்கத்திற்கான விருதைவென்றது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல