திங்கள், 13 செப்டம்பர், 2010

வீடியோ விளையாட்டு மோகத்தால் பிள்ளைகளையும் நாய்களையும் பராமரிக்க மறந்த பெண் கைது

இணையத்தள வீடியோ விளையாட்டில் இருந்த மோகத்தால் தனது பிள்ளைகளை அலட்சியம் செய்ததுடன் தனது இரு நாய்களையும் பட்டினியால் பரிதாப மரணத்தை தழுவவைத்த தாயொருவருக்கு இணையத்தளத்தை பயன்படுத்த பிரித்தானிய நீதிபதியொருவர் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

கணவனை இழந்த 3 பிள்ளைகளுக்கு தாயான மேற்படி பெண்ணின் (33 வயது) பெயர் சட்டக் காரணங்களை முன்னிட்டு வெளியிடப்படவில்லை.

“ஸ்மோல் வேர்ல்ட்' வீடியோ விளையாட்டில் ஆழ்ந்து தனது பிள்ளைகளையும் வளர்ப்பு நாய்களையும் கவனிக்க மறந்த இந்தப் பெண்ணுக்கு இணையத்தளத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடைக்கு மேலதிகமாக ஒத்திவைக்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையுடன் ஊதியம் பெறாது 75 மணி நேரம் பணி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் எந்தவொரு வளர்ப்பு பிராணியை வளர்க்கவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வீடியோ விளையாட்டுக்கு அடிமையாகி அதில் மூழ்கியிருந்த இந்தப் பெண் இரவில் இரு மணி நேரம் மட்டுமே உறங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அவரது 9 வயது, 10 வயது மற்றும் 13 வயதுடைய பிள்ளைகள் வரும் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து குளிரான உணவுகளை உண்டு போஷாக்கின்மையால் வாடியுள்ளனர். இந்நிலையில் பசியால் இறந்த இரு நாய்களது சடலங்களும் அகற்றப்படாது வீட்டின் சாப்பாட்டறையில் இருந்துள்ளன.

அழுகிய நாயின் சடலங்களிலிருந்து வீசிய துர்நாற்றம் தாங்க முடியாது அயலவர்கள் பொலிஸில் செய்த றைப்பாட்டையடுத்து பொலிஸார் கென்ட் நகரில் சுவான்லி எனும் இடத்தில் அமைந்துள்ள மேற்படி பெண்ணின் வீட்டை முற்றுகையிட்டு அப்பெண்ணைக் கைது செய்தனர்.

தனது கணவர் மாரடைப்பால் இறக்கும் வரை அர்ப்பணிப்பு மிக்க குடும்பப் பெண்ணாக திகழ்ந்த அப்பெண், கணவனின் மரணத்தின் பின் மனம் உடைந்து கவலையை மறக்க “வீடியோ' விளையாட்டை நாடியதாக கூறப்படுகிறது.

அவரது வழக்கானது கென்ட் நகரிலுள்ள மெயிட்ஸ்டோன் கிறவுண் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப் பெண்ணின் பிள்ளைகள் மூவரும் தற்போது சிறுவர் பராமப்பு நிலையத்தில் ஒப்ப டைக்கப்பட்டுள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல