திங்கள், 13 செப்டம்பர், 2010

இருதய இயக்கம் நின்று ஒரு மணி நேரம் கழித்து உயிர் பிழைத்த பாலகன்

பனியால் உறைந்திருந்த நீருக்குள் விழுந்து இதயம் செயலிழந்த பாலகன் ஒருவன் ஒரு மணி நேரத்தின் பின் அதிசயிக்கத்தக்க வகையில் உயிர் பிழைத்த சம்பவம் அமெரிக்க கொலராடோ மாநிலத்தில் இடம் பெற்றுள்ளது.
கோர் ஒட்டேஸன் என்ற இந்த 21 மாத வயதான பாலகன் நீர்ப்பாசன நீர் தாங்கியொன்றில் விழுந்து 25 நிமி டங்களின் பின்பு மீட்கப் பட்டான்.

இந்நிலையில் இருதயம் செயலிழந்த சிறுவனின் மூளை தொடர்ந்து உயிர்ப்புடன் இருந்தமை காரணமாக அச்சிறுவன் பிழைப்பதற்கு ஒரு நிமிட வாய்ப்பே இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கோர் ஒட்டேஸன் மீட்கப்பட்டதும் அவனது பாட்டனாரும் ஓய்வு பெற்ற மருத்துவ சத்திரசிகிச்சை நிபுணருமான கிர்க் தலுதவி சிகிச்சையை மேற்கொண்டும் பயன் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து கோர் ஒட்டெஸன் இறந்து விட்டதாகவே அனைவராலும் கருதப்பட்டது.

மேற்படி பாலகனுக்கு சிகிச்சையை மேற் கொண்டு அவனை உயிர் பிழைக்க வைத்த மருத்துவர் ரொஜர் ஷெர்மன் விபரிக்கையில், ““ஒருவரது உடல் வெதவெதப்பாக இருக்கையில் அவர் ஒரு போதும் இறந்த ஒருவராக கருதப்பட முடியாது'' என்று கூறினார்.

கோர் ஒட்டேஸனின் தாயாரான ஆமி (38 வயது), விபரிக்கையில், கடவுளே தக்க தருணத்தில் தனது குழந்தையை காப்பாற்றியதாகத் தெரிவித்தார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல