திங்கள், 13 செப்டம்பர், 2010

முட்டையில் ஆரம்பித்த சண்டை ஐவரின் படுகொலையில் முடிந்த விபரீதம்

காலை உணவு வேளையில் ஏற்பட்ட விவாதத்தின் போது நபரொருவர் தனது மனைவி, வளர்ப்பு மகள் உட்பட ஐவரை சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட விபரீத சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
கென்டக்கியிலுள்ள ஜக்ஸன் எனும் இடத்தில் வசிக்கும் ஸ்டான்லி நீஸ் ( Stanley Neace 47 வயது) என்ற இந்த நபர், சம்பவ தினம் காலை உணவின் போது தனக்கு வழங்கப்பட்ட முட்டைகள் சூடாக இல்லை என குறிப்பிட்டு தனது மனைவியுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது சினத்தில் தன்னை மறந்த ஸ்டான்லி நீஸ், துப்பாக்கியை எடுத்து சரமாயாக சுட ஆரம்பித்தார்.

இந்நிலையில் தனது வசிப்பிடத்திலிருந்து அருகிலுள்ள வசிப்பிடமொன்றுக்கு தப்பி யோடிய தனது மனைவி சண்ட்ராவை (54 வயது) துரத்திச் சென்ற ஸ்டான்லி நீஸ் சுட்டுக் கொன்றுள்ளார்.
இந்த சம்பவத்தில் ஸ்டான்லி நீஸின் மகளான சண்ட்ரா ஸ்ரோங் (28 வயது), அயலவர்களான டெனிஸ் ரேர்னர் (31 வயது), தெரேஸா புகத் (30 வயது), தம்மிகில் போர்ன் (40 வயது) ஆகியோர் பலியாகியுள்ளனர்.

தெரேஸா புகத்தை சுட்டுக் கொன்ற ஸ்டான்லி நீஸ், அவரது 7 வயது மகளையும் சுட முயன்றதாகவும் இந்நிலையில் அச்சிறுமி தன்னைச் சுட வேண்டாமென கெஞ்சவும் அவரை தப்பிச் செல்ல அவர் அனுமதித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல