திங்கள், 13 செப்டம்பர், 2010

குமரன் பத்மநாதன், தன்னார்வ தொண்டு நிறுவனம் எதனையும் நிறுவவில்லை ‐ அரசாங்கம்!

புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன், தன்னார்வ தொண்டு நிறுவனம் எதனையும் நிறுவவில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹூலுகல்ல தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்யும் நோக்கில் குமரன் பத்மநாதன் தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றை நிறுவியுள்ளாதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நெர்டோ எனப்படும் வடக்கு கிழக்கு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனம் என்ற பெயரில் குமரன் பத்மநாதன் தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றை அமைத்துள்ளதாக தெரிவிக்கப்படும் தகவல்கள் குறித்து தமக்கு எதுவும் தெரியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பெயரில் எந்தவொரு தன்னார்வ தொண்டு நிறுவனமும் பதிவு செய்யப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குமரன் பத்மநாதன் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அதனைத் தவிர வேறு எதுவும் தமக்குத் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு நிதி உதவிகள் கிடைக்கப் பெற்று வருவதாகவும் இதனைப் பயன்படுத்தி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றை அமைத்துள்ளதாகவும் அண்மையில் குமரன் பத்மநாதன் தெரிவித்திருந்தார். குறிப்பாக அந்த நிறுவனம் குறித்த அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட பதிவு இலக்கம், வவுனியா விலாசம் என்பவற்றையும் அண்மைய செவ்வியில் குமரன் பத்மநாதன் தகவல்களை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல