சனி, 23 அக்டோபர், 2010

கள்ளத்தொடர்பால் பிறந்த பெண் குழந்தை: ரூ.5,000க்கு விற்பனை

திருச்சியில் கள்ளத்தொடர்பால் பிறந்த குழந்தையை வளர்க்க விரும்பாமல் குழந்தையை விற்ற தாய், அதை வாங்கியவர் மற்றும் குழந்தைகளை வாங்கி விற்கும் புரோக்கர் என, மூன்று பெண்களை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி பாலக்கரை காஜாபேட்டையைச் சேர்ந்த ஜோதி என்பவரின் மனைவி மணிமேகலை. இருவருக்கும் இடையே பிரச்னை காரணமாக பிரிந்து விட்டனர். மணிமேகலை, தன் மகனுடன் காஜாபேட்டை பகுதியில், வசித்து வந்தார். அப்போது, உறையூரைச் சேர்ந்த முருகனுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதன் விளைவாக கர்ப்பம் அடைந்த மணிமேகலைக்கு, கடந்த 19ம் தேதி, அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை வளர்க்க விரும்பாத மணிமேகலை, அதை யாரிடமாவது கொடுத்துவிட நினைத்தார். இதையறிந்த காஜாபேட்டையின் பிரபல ரவுடி பங்க் செல்வத்தின் மனைவி தாஜ்நிஷா, தன்னிடம் குழந்தையை கொடுத்தால் 5,000 ரூபாய் கொடுப்பதாக கூறினார். இதற்கு மணிமேகலையும் சம்மதித்து, குழந்தையை கொடுத்தார். அதேபகுதியைச் சேர்ந்த தவுலத் என்ற பெண், அக்குழந்தையை அதிக விலைக்கு கொடுக்குமாறு தாஜ்நிஷாவிடம் கேட்டார். அதற்கு அவர் மறுக்கவே, இருவரிடையே தகராறு ஏற்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள், பாலக்கரை போலீசில் புகார் செய்தனர். தாஜ்நிஷாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தை விற்பனை நடந்தது தெரியவந்தது. இதையடுத்து, தாஜ்நிஷா, தவுலத், குழந்தையின் தாய் மணிமேகலை ஆகிய மூவரையும் நேற்றுமுன்தினம் இரவு, போலீசார் கைது செய்தனர். தாஜ்நிஷாவிடம் இருந்த பச்சிளம் பெண் குழந்தையை மீட்ட போலீசார், தாய் மணிமேகலையிடம் ஒப்படைத்தனர். இதில், தவுலத் குழந்தைகளை வாங்கி விற்கும் புரோக்கர் என போலீஸ் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, திருச்சியில் ஏற்கனவே காணாமல் போன இரண்டு வயது குழந்தை லாவண்யா குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். குழந்தை விற்பனைக்கு தவுலத்துக்கு உதவியாக இருக்கும் அவரது மகள் பானு, மருமகன் அக்பர் ஆகியோரையும், போலீசார் தேடி வருகின்றனர்.

Dinamalar

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல