சனி, 23 அக்டோபர், 2010

8 மாத கர்ப்பிணிக்கு கட்டாய கருக்கலைப்பு

சீனாவில் 130 கோடிக்கு அதிகமாக மக்கள் தொகை உள்ளது. எனவே, ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற கொள்கையை அந்த நாட்டு அரசு மிகவும் கண்டிப்புடன் அமல் படுத்தி வருகிறது. இந்த நிலையில், சீனாவின் தெற்கு பகுதியை சேர்ந்த லு யாங்குவான் என்ற கட்டிடத் தொழிலாளியின் மனைவி 8 மாத கர்ப்பமாக இருந்தார். அவருக்கு ஏற்கனவே 9 வயதில் மகள் உண்டு.

எனவே, கடந்த 10-ந் தேதி அன்று குடும்பக்கட்டுப்பாடு அதிகாரிகள் அதிரடியாக வீட்டுக்குள் புகுந்து யாங்குவானின் மனைவியை பிடித்துச் சென்று, அடித்து, உதைத்து மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், அந்தப் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து வயிற்றில் இருந்த 8 மாத கருவை டாக்டர்கள் உதவியோடு கலைத்தனர். குழந்தை பிறப்பதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக யாங்குவான் தெரிவித்திருக்கிறார்.

சீனாவில், இதுபோன்று ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக போலீசாரிடம் புகார் தெரிவித்தால், `குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான விவகாரங்களில் தலையிட முடியாது` என கூறி விடுகின்றனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல