கைனோ ஹன்ட் வயது 33
லண்டனைச் சேர்ந்த பாய்லர் இன்ஜினியர் கைனோ ஹன்ட். வீடுகளுக்கு சர்வீஸ் செய்ய செல்லும் போது, தனியாக இருக்கும் பெண்களிடம் யோகா செய்தால் உடம்புக்கு நல்லது என அறிவுரை கூறுவார். இது பற்றி ஆர்வமாக கேட்பவர்களிடம், குனிந்து நிமிர்ந்து சில யோகாசனங்களையும் செய்து காட்டுவார். அவர்களையும் அதேபோல் செய்யும்படி கூறுவார். இலவசமாக கற்றுக்கொள்ளலாம் என நினைத்து சில பெண்களும், மெக்கானிக் சொன்னபடி செய்துள்ளனர். கை, கால்களை தூக்க முடியாமல் திணறுபவர்களுக்கு, இவரே உதவி செய்துள்ளார். அப்படியே படிப்படியாக, தனது சில்மிஷ வேலையையும் காட்டியுள்ளார். சுதாரித்த சில பெண்கள், இவரை விரட்டியுள்ளனர். என்பீல்டு பகுதியில் உள்ள வீட்டுக்கு கடந்த மாதம் சர்வீஸ் செய்ய சென்றபோதும், இதே போல் நடந்துள்ளார் கைனோ ஹன்ட். அந்த வீட்டில் இருந்த பெண், உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார். கைனோ ஹன்ட் மீது போலீசார் பாலியல் தாக்குதல் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இச்செய்தியை பார்த்து ஏற்கனவே பாதிக்கப்பட்ட இரு பெண்களும் கைனோ ஹன்ட் மீது புகார் தெரிவித்துள்ளனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக