அமெரிக்காவின் நியூ ஜேர்ஸி நீதிமன்றில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
புலிகளின் ஆதரவாளர்கள் மூவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பிரபல செல்வந்த வர்த்தகர் ராஜ் ராஜரட்னம், அவரது தந்தை ஜேசுதாசன் ராஜரட்னம் மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஆகியவற்றுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் 22 கோடி ரூபா நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
நுகேகொடை வெலிவேரிய, பிலியந்தலை மற்றும் கல்கிஸை போன்ற இடங்களில் கடந்த காலங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் பெற்றோர், மனைவியர் சகோதரர்கள், பிள்ளைகள் என பல்வேறு தரப்பினர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
குறித்த வழக்கை விசாரணை செய்ய வேண்டாம் என ராஜ் ராஜரட்னம் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக திவயின பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி பேஸ் போல் அணித் தலைவரின் தந்தை விஜயன் ராஜரட்னம் பிரபல மரதன் ஓட்ட வீரர் கருவின் மனைவி ஆகியோரும் நட்டஈடு கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணைகளுக்காக சாட்சியங்களை திரட்டும் பணிகள் முன்னாள் புலனாய்வுத்துறை உயரதிகாரி லயனல் முனசிங்கவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக