சனி, 23 அக்டோபர், 2010

மன்னிப்பு கோரும் அமெரிக்க நடிகை

சஞ்சிகையொன்றுக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்தமைக்காக ரசிகர்களிடமும் பொதுமக்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார் அமெரிக்க சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகையான டியன்னா ஆக்ரோன்.

24 வயதான டியன்னா அண்மையில் ஜி.கியூ எனும் சஞ்சிகைக்கு போஸ் கொடுத்திருந்தார். பிரபல புகைப்படக்கலைஞர்களில் ஒருவரான டெரி ரிச்சர்ட்ஸன் இப்புகைப்படங்களைப்  பிடித்திருந்தார்.
ஆனால், இப்படங்கள் படுமோசமாக இருப்பதாக புகார்கள் வந்தன. பாடசாலை மாணவிகளின் ஆடையுடன் கவர்ச்சி போஸ்கொடுப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெற்றோர்கள் பலரிடமிருந்தும்  கண்டனங்கள் வந்தன.

இந்நிலையில் தனது வலைப்பதிவில் இப்புகைப்படங்களுக்காக மன்னிப்பு கோருவதாக எழுதியுள்ளார் டியன்னா.

"அப்புகைப்படங்கள் எனது உண்மையான சுபாவத்தைப் பிரதிபலிக்கவில்லை. செக்ஸியான பாடசாலை மாணவியின் வேடத்தில் படம் எடுக்க வேண்டும் என்பது எனது எண்ணமல்ல, ஆனால் படப்பிடிப்பாளர்  கேட்டபோது நான் மறுத்து வெளியேறவும் இல்லை.

அப்புகைப்படங்கள் உங்கள் 8 வயது பிள்ளையின் கையில் அந்த சஞ்சிகை கிடைத்திருந்தால் நான் மீண்டும் வருந்துகிறேன்" என  டியன்னா தெரிவித்துள்ளார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல