வெள்ளி, 1 அக்டோபர், 2010

முட்டை பாண் பிரியாணி

சோறு, இடியப்பம் போன்றவற்றில் தான் நீங்கள் பிரியாணி செய்வதினைப் பார்த்திருக்கின்றீர்கள் ஆனால் இங்கே நாம் பாணில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்ப்போம். நீங்களும் பாண் பிரியாணி செய்து சுவைத்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்

பாண் -1 இறாத்தல்

முட்டை- 5

இறால் - 100 கிராம்

உருளைக்கிழங்கு - 1/4 கிலோ கிராம்

கறிமிளகாய் - 50 கிராம்

வெங்காயம் - 100 கிராம்

பச்சை மிளகாய் - 4

தக்காளிப் பழம் - 2

இஞ்சி, பூண்டு விழுது- 1 மேசைக்கரண்டி

தக்காளிச் சோஸ் - 3 மேசைக்கரண்டி

சோயா சோஸ் - 2 மேசைக்கரண்டி

மாஜரின் - 50 கிராம்

எண்ணெய் - 500 மில்லி லீற்றர்

மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 நெட்டு

கடுகு - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை முதலில் உருளைக் கிழங்கு, கறிமிளகாய், வெங்காயம் என்பவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டவும். பின் பச்சை மிளகாயை சிறிதாக கீறவும். தாச்சியில் எண்ணெய் ஊற்றி சிறு சிறு துண்டுகளாக வெட்டிய உருளைக் கிழங்கினை நன்றாக வேகும் வரை பொரித்தெடுக்க வேண்டும். பின் பாணை சிறு சிறு துண்டுகளாக்கி வைக்கவும்.

இறாலை சுத்தம் செய்து அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து பொரித்து வைக்கவும். தக்களிப் பழத்தை மிக்ஸியில் இட்டு கூழாக அரைக்க வேண்டும். பின் முட்டையில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு தாச்சியில் மாஜரீனை இட்டு மாஜரீன் நன்கு சூடாகியதும் அதில் முதலில் கடுகை இட்டு அது வெடித்தவுடன் இஞ்சிப்பூண்டு விழுதினைச் சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும்.

பின் அதனுடன் வெங்காயம், கறிமிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை என்பவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். நன்றாக வதங்கியவுடன் அதனுடன் அடித்து வைத்துள்ள முட்டையினை சிறிது சிறிதாக இட்டு வறை போல நன்றாகக் கலக்கவும். பின் தக்களிக் கூழினை அதனுடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

அதன் பின் உருளைக் கிழங்கை, இறால், உப்பு, தக்காளிச் சோஸ், சோயாச் சோஸ் என்பவற்றைச் சேர்த்து நன்றாக கிளறவும். நன்றாக கலவை திரண்டு வந்ததும் அதனுடன் சிறு சிறு துண்டுகளாக்கி வைத்துள்ள பாணை இட்டு நன்றாக பிரட்ட வேண்டும். சுவையானதும் ஆரோக்கியமானதுமான முட்டை பாண் பிரியாணி ரெடி!

சூடுடன் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்பு: இது இரவு உணவிற்கு உகந்தது. இதனை குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருமே விரும்பி உண்பார்கள்.

தக்ஷாலினி விக்னேஸ்வரன் ....
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல