வெள்ளி, 1 அக்டோபர், 2010

இரண்டு வருடங்களுக்கு முன் இறந்த கணவனின் விந்தணுக்கள் மூலம் மனைவி குழந்தை பிரசவம்

இரு வருடங்களுக்கு முன் உயிரிழந்த கணவரின் சேமிக்கப்பட்ட விந்தணுக்களைப் பயன்படுத்தி கர்ப்பந்தரித்து ஆரோக்கிய குழந்தையொன்றை பெண்ணொருவர் பெற்றெடுத்த சம்பவம் பிரித்தானிய வெலிங்டன் நகரில் இடம்பெற்றுள்ளது.

லிஸா வில்கின்ஸன் என்ற மேற்படி பெண் (27 வயது), 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் எலும்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தனது கணவரான ஹேரத்தின் விந்தணுக்களைப் பயன்படுத்தி கருத்தரித்து, அவர் இறந்த இரண்டாவது ஆண்டு நினைவு தினத்துக்கு சரியாக 11 ஆவது நாளில் இக்குழந்தையை பிரசவித்துள்ளார். பிறந்த குழந்தைக்கு ஜக் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

புதிதாக பிறந்த குழந்தையை பார்த்ததும் ஆனந்தக் கண்ணீர் மல்கிய லிஸா, ““என் ஹேரத் என்னிடம் மீளவும் திரும்பி வந்துள்ளதாக உணர்கிறேன்'' என்று கூறினார்.

மருத்துவமனையொன்றில் உதவியாளர்களாக பணியாற்றிய லிஸாவும் ஹேரத்தும் 2003 ஆம் ஆண்டில் சந்தித்து காதல் கொண்டனர். அவர்களது சந்திப்புக்கு களம் அமைத்து தந்த ஸ்குரோவ் பார்க் மருத்துவமனையிலேயே லிஸா தனது குழந்தையை பிரசவித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை முதன் தலாக அறிந்து கொண்ட ஹேரத், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனது விந்தணுக்களை உறைய வைத்து பேணுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல