வெள்ளி, 1 அக்டோபர், 2010

இந்திய குழந்தையை தத்து எடுக்கும் ஹொலிவூட் நடிகை

ஹொலிவூட் நடிகை ஜுலியா ராபர்ட்சுக்கும், ஒளிப்பதிவாளர் டேனி மோடருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இது போதாது என்று இன்னொரு குழந்தை வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், ஜுலியா ராபர்ட்சோ, முந்தைய பிரசவம் மறுஜென்மம் போல சிக்கலாக இருந்ததால், குழந்தை பெற்றுக்கொள்ள தயங்குகிறார். எனவே, குழந்தையை தத்தெடுப்பதே சரியானது என்று கணவன்-மனைவி இருவரும் முடிவு செய்துள்ளனர். வேறு கலாசார பின்னணி கொண்ட குழந்தையை தத்தெடுக்கவே இருவரும் விரும்புகின்றனர்.

ஜுலியா ராபர்ட்ஸ், தான் இந்துவாக மாறிவிட்டதாக சமீபத்தில் பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவருக்கு இந்தியா மீது விசேஷ மரியாதை உண்டு. எனவே, இந்திய குழந்தையை தத்தெடுக்க அவர் முடிவு செய்துள்ளதாக அவருக்கு நெருக்கமான நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல