வெள்ளி, 1 அக்டோபர், 2010

வடக்கு பஸ் நடத்துனர்கள் பெண்களிடம் தகாத முறையில் நடக்க முற்படுவதாக குற்றச்சாட்டு!

வடக்கில் போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் பஸ்களின் நடத்துனர்கள் பெண்; பயணிகளிடம் தகாத முறையில் நடக்க முற்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக வவுனியா – மன்னார் வீதியைச் சேர்ந்த பஸ் நடத்துனர்கள் பெண் பயணிகளுக்கு தங்களது தொலைபேசி இலக்கங்களை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பஸ் டிக்கட்டுகளில் காதல் வாசகங்களை எழுதி பெண் பயணிகளிடம் வழங்குவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பஸ் போக்குவரத்து சங்கம் அறிவித்துள்ளது.

பெண் பயணிகள் தங்களது தொலைபேசி இலக்கங்களை வழங்கும் வரையில் பஸ் நடத்துனர்கள் மீதிப் பணத்தை வழங்குவதில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் போக்குவரத்துச் சங்கம் தெரிவித்துள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல