வெள்ளி, 29 அக்டோபர், 2010

படுத்து எழும்பிய சிறுவன் பலரையும் பரபரப்பில் ஆழ்த்திவிட்டான்

சேர்பியாவில் உள்ள பாடசாலை மாணவனான  திமித்திரிஜ் மிட்ரோவிக்கை பார்த்து அவனது குடும்பத்தினர் மற்றும் ஆசிரியர்கள் பிரமித்துப் போயுள்ளனர். காரணம், அவன் ஒருநாள் உறக்கத்திலிருந்து எழுந்து திடீரென ஆங்கில மொழியில் சிறப்பாக  பேச ஆரம்பித்துள்ளான். ஆனால் அவனுக்கு ஆங்கிலத்தில் ஒருவார்த்தையேனும் இதுவரை கற்றுக்கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திமித்திரிஜ்ஜின் அன்னை டிரக்னா குறிப்பிடுகையில், நிஸ் நகரில் உள்ள  தனது வீட்டில் தனது மகன் 3 வயதாக இருக்கும்போது, ஒரு நாள் காலையில் எழுந்து சரளமாக துல்லியமான ஆங்கிலத்தில் உரையாடத் தொடங்கியதாகக் கூறியுள்ளார்.

திமித்திரிஜ்ஜுக்கு தற்போது 11 வயது. அவனது குடும்பத்தில் அவன் மட்டுமே சரளமாக ஆங்கிலத்தில் உரையாடுகிறான். அவனது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருவாராலும் அவனது நீண்ட ஆங்கில உரையாடலை புரிந்துக்கொள்ள முடியவில்லையாம்.

'திமித்திரிஜ்ஜுக்கு 3 வயது இருக்கும் போது ஒரு நாள் படுக்கையிலிருந்து எழுந்தவுடன்  என்னுடன் ஆங்கிலத்தில் உரையாட ஆரம்பித்தான். எனக்கு சிறிது ஆங்கிலம் தெரியும் என்பதால் அவன் கூறியவற்றில் சிலவற்றை என்னால் உணர்ந்துக்கொள்ள முடிந்தது. ஆனால் அவன் மிக நன்றாக ஆங்கிலத்தில் உரையாடியதால் அவன் என்ன கூறுகிறான் என்பதை விளங்கிக்கொள்ள மொழிபெயர்ப்பாளர் ஒருவரை அழைத்து அவன் கூறுவதை என்னிடம் மொழிபெயர்த்துக் கூறும்படி கூறினேன்' என அவனது அன்னை விளக்கினார்.

அதே நேரம் திமித்ரிஜ்ஜூக்கு 5 வயதாக இருக்கும் போது ஹரி பொட்டர் நாவல்களை வாசித்து அவனது நண்பர்களுக்கு அக்கதைகளை கூற ஆரம்பித்தான். தற்போது அவன் அவனது தாய்மொழியை அரிதாகவே பேசி வருகிறான்.

மருத்துவ நிபுணர்கள் பலரும் திமித்ரிஜ்ஜீன் திடீர் ஆங்கில மொழியாற்றல் குறித்து வியப்புத் தெரிவித்துள்ளனர்.

நிஸ் நகரில் உள்ள பல்கலைகழகத்தின் ஆங்கில மொழி விரிவுரையாளரான டெட்ஜனா பௌனோவிக் குறிப்பிடுகையில் 'அது ஆச்சரியமானது. நாங்கள் ஒரு மணித்தியாலம் அவனுடன் ஆங்கிலத்தில் உரையாடினோம். அவன் எங்களைவிட சிறப்பாக ஆங்கிலம் பேசுகிறான்' எனத் தெரிவித்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல