வெள்ளி, 29 அக்டோபர், 2010

தாய்லாந்து பொலிஸார் நேற்று மாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நூற்றுக்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் கைது!

தாய்லாந்து பொலிஸார் நேற்று மாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின்போது நூற்றுக்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் அங்கு கைது செய்யப்பட்டனர்.

மலேசிய- தாய்லாந்து எல்லைப் பகுதியில் அமைந்துள்ள songkhla, hatyai ஆகிய கிராமங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தவர்களே கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

அந்நாட்டில் சட்டரீதியாக தங்கி இருக்கின்றனர் என்பதை நிரூபிக்கும் வகையில் கைது இடம்பெற்றபோது இவர்களிடம் உரிய ஆவணங்கள் இருக்கவில்லை என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் கப்பல் ஒன்றின் மூலம் கனடா செல்ல தயார் நிலையில் இருந்தார்கள் என்று பொலிஸ் சந்தேகிக்கின்றது. இவர்களில் பெண்கள், சிறுவர்களும் அடங்குகின்றார்கள்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல