ஒரு தடவை வங்கியின் கணக்கு சரிபார்க்கப்பட்டபோது ஒரு பெருந்தொகை குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
யாரோ செய்த மோசடி, அப்பாவியான ஓ ஹென்றி மீது விழுந்தது. வங்கிப் பணத்தை மோசடி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ஓ ஹென்றி.
நிரபராதியான தான் சிறையில் அடைக்கப்பட்டது ஓ ஹென்றியின் மனதில் பெரும் வேதனையை ஏற்படுத்தியது.
அதை மறப்பதற்காக சிறைச்சாலையிலேயே கதை, கட்டுரைகள் எழுத முயற்சி செய்தார் அவர்.
சிறையிலேயே நல்ல கதைகளை எழுதினார் ஓ ஹென்றி.
சிறையை விட்டு வெளியே வந்த அவருக்கு வேறு வேலை கிடைக்கவில்லை. எனவே அவர் எழுதுவதையே தொழிலாக்கிக் கொண்டார்.
பின்னாளில் பிரபல கதாசிரியரான ஓ ஹென்றி, பெரும் புகழும், பொருளும் ஈட்டினார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக