எரித்ரியா மற்றும் சுவீடன் நாட்டு பிரஜாவுரிமையை பெற்றுள்ள அவர், எரித்ரியாவின் முதலாவது சுதந்திர பத்திரிகையான செரிட்டின் ஸ்தாபகர்களில் ஒருவராவார்.
தனியாருக்கு சொந்தமான செய்தி ஊடகத்தை கொண்டிராத ஒரே ஆபிரிக்க நாடு எரித்ரியாவாகும்.
2001 ஆம் ஆண்டில் அந்நாட்டு அரசாங்கம் செரிட் பத்திரிகை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்து அதனை மூடியது.
1987 ஆம் ஆண்டு சுதந்திரத்துக்கான போரின் போது தனது நாட்டை விட்டு வெளியேறிய ஐஸக் (45 வயது), சுவீடனில் குடியேறினார். அங்கு அவர் பல வருடங்களாக சுத்திகரிப்பாளராக கடமையாற்றி அந்நாட்டின் பிரஜாவுரிமையையும் பெற்றுக் கொண்டார்.
1990 ஆம் ஆண்டு எரித்திரியாவுக்கு திரும்பிய அவர் செரிட் பத்திரிகையை ஆரம்பித்தார்.
அரசாங்கத்தின் அதிகார துஷ்பிரயோக நடவடிக்கைகளை புலனாய்வு செய்து வெளிப்படுத்தி வந்ததன் மூலம் அப்பத்திரிக்கை அரசாங்கத்தின் கடும் எதிர்ப்பை சம்பாதித்தது.
9 வருடங்களுக்கு முன் ஐஸக்கும் மேற்படி பத்திரிக்கையின் உமையாளர்கள், ஆசியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட ஏனைய 13 பேரும் கைது செய்யப்பட்டனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக