இதில் 10 சுற்றுலாப் பயணிகள் வீதம் நூலகத்தைப் பார்வையிட அனுமதிப்பது என இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை நூல்நிலையத்துக்குச் சென்ற இராணுவத்தினர், எக்காரணம் கொண்டும் எந்தவொரு சுற்றுலாப் பயணிகளும் நூல்நிலையத்தைப் பார்வையிட முடி யாது எனவும் இது மேலிடத்து உத்தரவு எனவும் பிரதம நூலகரிடம் தெரிவித்ததாக கூறப்பட்டது.
எனினும் நூலகருடன் தொடர்புகொள்ள முடியவில்லை. இதேவேளை யாழ்.நூலகத்திற்கு முன்பாக படையினர் கம்பி போட்டு வீதித்தடை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை யாழ்.நூலகத்தில் கடந்த 23 ஆம் திகதி நடைபெற்ற அசெளகரிய நிலையை ஊடகங்கள் தவறான முறையில் பிரசுரித்து இனரீதியான குழப்பங்களை உருவாக்க முயற்சிக்கிறது. எப்பொழுதும் பத்திரிகைகள் உண்மைக்குப்புறம்பான செய்திகளைப் பிரசுரிக்க வேண்டாம் என நான் இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கிறேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ். பொது நூலகத்தில் கடந்த 23 ஆம் திகதி நடைபெற்ற அசெளகரிய நிலை தொடர்பான கலந்துரையாடல் நூலக கேட்போர் கூடத்தில் நேற்றுக் காலை 8.00 மணியளவில் நடைபெற்றது. இந்நி கழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றும் போது, தவறுகளைத் திருத்திக்கொள்ளுதல் வேண்டும். தவறுகளைப்பற்றி மீண்டும் மீண்டும் விவாதித்து தவறுகளை ஏற்படுத்தி விடக்கூடாது. நூல்நிலையத்தைப் பார்வையிட வரையறை செய்யப்படவேண்டும் . வரையறை செய்யப்படும் சந்தர்ப்பத்தில் தான் இவ்வாறான பிரச்சினைகள் எதிர்வரும் காலங்களில் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். நூலகத்தில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பாது காப்பில் ஈடுபடுவது அவசியம். காரணம் தவறுகள் எச்சந்தர்ப்பத்திலும் ஏற்பட இடமளிக் கக்கூடாது என அவர் தெரிவித்தார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக