ஈரானிய உதைபந்தாட்டவீரர் கம்பக்ஹே தலைமையிலான உதைபந்தாட்டவீரர்களும் இரு ஜனாதிபதிகளுடன் இந்த விளையாட்டில் பங்கேற்றனர்.
ஈரானிய ஜனாதிபதி மஹ்த் அஹ்மடி நஜாத்தின் நெருங்கிய நண்பரான ஈவோ மொராலஸ், இரு நாட்டுக்கு இடையிலான பொருளாதார உறவுகளை ஊக்குவிக்கும் முகமாகவும் பொலிவியாவிலான ஈரானிய முதலீடுகளை பேணும் நோக்கிலும் ஈரானுக்கான இந்த விஜயத்தை மேற்கொண்டிருந் தார்.
பொலிவிய ஜனாதிபதி மொராலஸ் ஈரானுக்கு விஜயம் செய்வது கடந்த பல வருடங்களில் இது இரண்டாவது தடவையாகும்.
அஹ்மடி நஜாத் 2007 ஆம் ஆண்டில் பொலிவியாவுக்கு பயணம் மேற்கொண்டார். அது ஈரானிய ஜனாதிபதி ஒருவரால் பொலிவியாவுக்கு மேற்கொள்ளப்பட்ட முதலாவது விஜயமாக அமைந்தது.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக