மாதிரிக்கார்
இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் மணிக்கு 1600கி.மீ வேகத்தில் ஓடும் காரை உருவாக்கி வருகிறார்கள். இந்த கார் தயாரிக்கும் பணியில் ரிச்சர்ட் நோபல் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டு இருக்கிறார்கள். மாதிரிக்கார்
இந்த பணி வருகிற ஜனவரி மாதம் தொடங்கப்பட இருக்கிறது. இந்த கார் தயாரிப்பு பணிகள் 2012-ம் ஆண்டு முழுமை அடைந்து பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் தயாரிக்கும் பணிக்கு தென்னாப்பிரிக்காவில் உள்ள நார்த்தன் கேப் மாநில அரசாங்கம் உதவி செய்து வருகிறது. இந்த காரில் அதிக சக்தி வாய்ந்த ஜெட் என்ஜினும், ராக்கெட்டும் பொருத்தப்படுகிறது. இதன் பாகங்கள் மிக மெலிதான உலோக கலவையினால் அமைக்கப்பட இருக்கிறது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக