சான்தாபி மாகாணத்தைச் சேர்ந்த மேற்படி 43 வயது மகள், அவரது 13 ஆவது வயது முதற்கொண்டு தந்தையால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு வந்துள்ளார்.
கால்நடைகளை திருடியமைக்காக மேற்படி நபர் கைது செய்யப்பட்ட போதே அந்த பெண் தனக்கு நேர்ந்த அவலத்தை முதன் முதலாக துணிந்து பொலிஸாரிடம் வெளியிட்டுள்ளார்.
தனது தந்தை துப்பாக்கியைக் காட்டி தன்னை அச்சுறுத்தி வைத்திருந்ததாக அந்தப் பெண் கூறினார்.
அப் பெண்ணின் 8 பிள்ளைகள் மட்டுமே தற்போது உயிருடன் இருப்பதாகவும் அப்பிள்ளைகளுக்கு தமது பாட்டனாரே தமது தந்தையென தெரியாதெனவும் கூறப்படுகிறது.
தனது பாட்டனாரே தனது தந்தையென அறிந்த ஒரேயொருவரான தனது மூத்த மகன் அதிர்ச்சியடைந்து தற்கொலை செய்து கொண்டதாக அப்பெண் தெரிவித்தார்.
தான் வேறு நபர்கள் மூலமே கருத்தரித்து குழந்தைகளைப் பெற்றதாக தனது பிள்ளைகளுக்கும் அயலவர்களுக்கும் தான் தெரிவித்திருந்ததாக அவர் கூறினார்.
ஆர்ஜென்டீனõவில் பின் தங்கிய பிராந்தியங்களில் குடும்பங்களிடையே பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவது சாதாரணமாக உள்ளதாக மேற்படி வழக்கில் ஆஜராகிய நீதிபதி விர்ஜிலியோ பாலுட் தெரிவித்தார்.
மேற்படி தந்தையின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அவர் கூறினார்.
கடந்த மாதம் ஆர்ஜென்டீனாவின் கொர் டோபா மாகாணத்தில் தனது மகளை 20 வருட காலமாக பாலியல் வல்லுறவுக்குட்ப டுத்தி 6 பிள்ளைகளுக்கு தாயாக்கிய நபரொருவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக